இசைஞானி இளையராஜா பற்றி பலரும் அறிந்திராத அரிய தகவல்கள்..!

First Published Jun 2, 2021, 11:14 AM IST

இசைஞானி இளையராஜா இன்று தன்னுடைய 78 ஆவது பிறந்தநாளை  கொண்டாடி வருகிறார். பல இரவுகளை தன்னுடைய இனிமையான இசையால் இனிமையான இரவுகளாக மாற்றும் இவரை பற்றி அறிந்து கொள்வதில் இவரது ரசிகர்களுக்கு அலாதி பிரியம். அந்த வகையில் தற்போது இவரை பற்றி பலரும் அறிந்திடாத சில அரிய விஷயங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
 

உதவியாளராக துவங்கிய இசை பயணம்...இளையராஜா அவரது சகோதரர் பாவலர் வரதராஜன் என்பவருக்கு உதவியாளராக தான் தன்னுடைய பணியை துவங்கினார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில், அவருக்கு உதவியாக இளையராஜாவையும் அவரது அம்மா அனுப்பி வைப்பது வழக்கம். அவரிடம் இசை பணியை கற்று கொண்டு, அவருடைய வழிகாட்டுதலில் தான் இன்று இசையின் ராஜாவாக உயர்ந்து நிற்கிறார் இளையராஜா.
undefined
அக்காவின் மகளையே திருமணம் முடித்த இளையராஜாஇளையராஜா தனது சொந்த சகோதரியின் மகளையே, பெற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என இரண்டு மகன்கள், பவதாரிணி என்கிற மகளும் உள்ளார். இவர்கள் மூவருமே இசை துறையில் ஜொலித்து கொண்டிருக்கின்றனர்.
undefined
மதம் மாறிய இளையராஜாஇளையராஜா பிறப்பால் ஒரு கிறிஸ்தவர். பின்னர் ஹிந்து கடவுள்கள் மீது கொண்ட பக்தி காரணமாகா இந்துவாக மாறினார். இளையராஜாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ரமணா மகரிஷி மற்றும் தாய் மூகாம்பிகையை ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யக்கூடியவர்.
undefined
இளையராஜா இசையில் இது வரை பாடாத பாடகி?இளையராஜா தன்னுடைய இசை பயணத்தை துவங்கிய காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியிடம் ஒரு பாடலை பாட வேண்டும் என, கேட்டுள்ளார். ஆனால் அதற்க்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இது வரை அவர் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலை கூட பாடியதில்லை.
undefined
விலை உயர்ந்த ஆடைகள் மீது அலாதி பிரியம்தற்போது இளையராஜா, வெள்ளை ஜிப்பா, மற்றும் வெள்ளை வேஷ்டி மட்டும் அணிந்து மிகவும் சாதாரணமாக காணப்பட்டாலும், இளம் வயதில் எல்லாம், விலை உயர்ந்த ஆடைகள் மீது கொள்ளை ஆசை கொண்டவராம்.
undefined
தேசிய விருதையே நிராகரித்த இளையராஜாஇந்திய சினிமா துறையில் உள்ள ஒவ்வொரு கலைஞர்களும் வாங்க வேண்டும் என ஆசைப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருதுகள் தான். ஆனால் அதை கூட இரண்டு முறை ஒரு சில காரணங்களுக்காக வாங்காமல் தவிர்த்திருக்கிறார் இளையராஜா.
undefined
கலைஞர் கிடைத்த இசைஞானி பட்டம்:ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து சாதனை செய்திருக்கும் இளையராஜா. அவருங்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தான். மேஸ்ட்ரோ பட்டம் Symphony ஓர்சேஸ்ட்ரா இளையராஜாவுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!