அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின் டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.
"பிகில்" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது மணப்பெண் கெட்டப்பில் பார்க்க செம்ம அழகாக இருக்கும் இந்திரஜாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
அளவான மேக்கப், புடவை, நகைகள் என க்யூட் லுக்கில் இருக்கு புகைப்படங்களை பார்த்து "பிகில்" பாண்டியம்மாளா? இது என ரசிகர்கள் வாய்பிளக்கின்றனர்.
டிக்-டாக்கில் மட்டுமல்லாது பரத நாட்டியத்திலும் சிறப்பான தேர்ச்சி பெற்ற ரோபோ சங்கரின் செல்ல மகள், யாராலும் முடியாத நடன அசைவுகளை கூட அழகாக ஆடக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணப்பெண் கெட்டப்பில் இருக்கும் இந்திரஜா எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
மெஹந்தி போட்ட கைகளை ரசிகர்களுக்காக காட்டும் இந்திரஜா