Biggboss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார்?... லீக்கான தகவல்

Ganesh A   | Asianet News
Published : Mar 11, 2022, 12:00 PM ISTUpdated : Mar 11, 2022, 12:01 PM IST

Biggboss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் பாலா, ஜூலி, சினேகன், சுருதி ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் இறுதியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்.

PREV
14
Biggboss Ultimate : பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார்?... லீக்கான தகவல்

கமலுக்கு பதில் சிம்பு

ஓடிடி தளத்துக்கென பிரத்யேகமாக நடத்தப்படுகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர் அவர் விலகியதை அடுத்து கடந்த 2 வாரங்களாக அவருக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். 

24

பிக்பாஸ் எவிக்‌ஷன்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் விதிப்படி மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தியும், இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணியும், மூன்றாவது வார இறுதியில் அபிநய் மற்றும் ஷாரிக்கும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

34

இந்த வார எவிக்‌ஷனில் 4 பேர்

4-வது வார இறுதியில் வனிதா தாமாகவே வெளியேறியதால், அந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்பட வில்லை. கடந்த வாரம் தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட் ஆனார். இந்த வாரம் பாலா, ஜூலி, சினேகன், சுருதி ஆகியோர் நாமினேஷனில் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரம் இறுதியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்.

44

வெளியேறப்போவது யார்?

அவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நால்வரில் பாலாவுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன. ஆதலால் அவர் முதலாவதாக சேவ் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. பாலாவுக்கு அடுத்த இடத்தில் ஜூலி இருக்கிறார். முறையே மூன்றாவது இடத்தில் சுருதியும், 4-வது இடத்தில் சினேகனும் உள்ளனர். இதன்மூலம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு சினேகன் எவிக்ட் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அந்த விஷயத்தில் கறார் காட்டிய சிம்பு... முடியவே முடியாதுனு சொன்ன தயாரிப்பாளர் - கைவிடப்படுகிறதா கொரோனா குமார்

click me!

Recommended Stories