Biggboss Tamil 5: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்-பை சொல்லப்போவது இவர்கள் இருவரில் ஒருவர் தான்!!

Published : Nov 06, 2021, 05:21 PM ISTUpdated : Nov 06, 2021, 05:29 PM IST

பிக்பாஸ் (Biggboss Tamil 5) நிகழ்ச்சி அனைவரும் எதிர்பார்த்ததை விட மிகவும் பரபரப்பாகவும், பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமலும் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.  

PREV
15
Biggboss Tamil 5: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்-பை சொல்லப்போவது இவர்கள் இருவரில் ஒருவர் தான்!!

கடந்த மாதம் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக, ஒரு மாதத்தை கடந்துள்ளது. ஆரம்பத்தில் முதல் மூன்று வாரம் பெரிதாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தாலும், தற்போது பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை இல்லாத நாளே இல்லை என சொல்லும் நிலைமை தான் உள்ளது.

 

25

ஒவ்வொரு நாளும், ஏதேனும் ஒரு பிரச்சனைக்காக பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வாய் சண்டை போட்டு வருவதும், தாரை தாரையாக கண்ணீரை சிந்துவதையும் பார்க்க முடிகிறது.

 

35

குறிப்பாக நேற்று பாத் ரூமில் குழாயடி சண்டையை மிஞ்சும் விதத்தில், பாவனி பொய் சொல்லுவதாக கூறி, தாமரை அவரை அடிக்கவே பாய்ந்து விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

 

45

இந்நிலையில் இந்த வாரம்,  அக்ஷரா, சிபி, ஸ்ருதி, நிரூப் , பாவனி உள்ளிட்ட 9 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களின் 2 பேரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

55

அதாவது இந்த வாரத்தில் அபிநய் மற்றும் ஸ்ருதி இருவர் தான் மிக குறைந்த வாக்குகளை.  ஏற்கனவே வாரம் தோறும் நெட்டிசன்கள் யார் வெளியேறுவார் என்பதை துல்லியமாக கணித்து வரும் நிலையில், இந்த வாரம் ஸ்ருதியே மிக குறைவாக வாக்குகள் பெற்றுள்ளதால், அவரே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories