மூஞ்சி வீங்கி போய் இருந்த ரைசாவா இது? சும்மா முகம் மழமழன்னு மாறி ஜொலிக்குறாங்களே..!

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அழகுக்கலை மருத்துவர் பைரவிக்கு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது முகம் சரியாகி அழகு தேவதையாக ஜொலிக்கிறார்.
 

மாடல் அழகியான ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார். அதன் பின்னர் 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்தார்.
தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘நேற்று எளிமையான ஃபேசியல் செய்வதற்காக அழகுக்கலை மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் என்னை வலுக்கட்டாயமாக வேறு சில அழகு செயல்முறைகளை எடுத்து கொள்ள கட்டாயப்படுத்தினார். அதனுடைய விளைவு தான் இது என்று தன்னுடைய முகமெல்லாம் வீங்கிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முகப்பொலிவு பெற 1,27,500 ரூபாயை செலுத்தி சிகிச்சை எடுத்த பின்பு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக ரைசா புகார் தெரிவித்தார்.
மேலும் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அந்த மருத்து சிகிச்சை மையத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
ஆனால் அந்த மருத்துவமனை நிர்வாகம், தன்னுடைய வாடிக்கையாளர்கள் மத்தியில் அவதூறு பரப்பும் வங்கியில் ரைசா நாடகமாடி வருவதாகும், இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் மருத்துவர் பைரவி தெரிவித்திருந்தார்.
நடிகை ரைசா வில்சன் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை மூன்று முறை சிகிச்சை பெற்றுள்ளார்,மேலும் அவர் பெற்று வரும் சிகிச்சையில் திடீரென இப்படி ஏற்படலாம் என்றும் அந்த பாதிப்பு அதிகபட்சமாக 8 நாட்களில் சரி ஆகிவிடும் என்று தெரிந்தும் இப்படி மருத்துவமனை மீது உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை தெரிவித்து உள்ளார் என கூறி இருந்தனர்.
raiza

Latest Videos

click me!