பிக்பாஸ் லாஸ்லியா (Biggboss Losliya) அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி, வரும் நிலையில் முன்பை விட தினுசு தினுசா போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது திடீர் என ஆளே ஒரேயடியாக மாறி சில மாற்றங்களுடன் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவை உலகமறிய செய்தது என்றால் அது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
210
ஸ்மூத்தாக போய் கொண்டிருந்த லாஸ்லியாவின் விளையாட்டில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது கவினுடன் இவருக்கு திடீர் என வந்த காதல்.
310
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, தெய்வீகமாக இருந்த இவர்களது காதல்... வெளியே வந்த வேகத்தில் காணாமல் போனது.
410
இருவருமே தற்போது வரை தங்களது காதல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அடுத்தடுத்து கோலிவுட் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
510
அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில், சில மாதங்களுக்கு முன் வெளியான 'ஃபிரென்ட்ஷிப்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
610
இவருடைய நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள, 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதன் ரிலீஸும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
710
அதே போல் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா உருகி உருகி காதலித்த, கவின் நடிப்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியான 'லிப்ட்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடித்து வருகிறார்.
810
லாஸ்லியாவும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். எனவே முன்பை விட கொஞ்சம் கிளாமரை கூட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
910
தற்போது லாஸ்லியா தன்னுடைய ஹேர் ஸ்டைலை, பாப் கட்டிங்காக மாற்றி... ஹேர் கலரிங் செய்து ஒட்டுமொத்தமாக ஆளே மாறி போய் காட்சியளிக்கிறார்.
1010
இவரது நடிப்பில் வெளியானதோ ஒரே ஒரு படம் தான்... அதற்குள் இப்படி ஒரு மாற்றமா? என நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் இவரது புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.