பச்சை நிற புடவையில்... புதிய லுக்கில் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்! கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு..

First Published | Aug 9, 2020, 1:02 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் லாஸ்லியா, தற்போது பச்சை நிற புடவையில் பேரழகியாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்ற, இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இது
பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ, அதேபோல் லாஸ்லியாவிற்கும் ஆர்மிகள் தூள் பறந்தது. அதுவே இவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது
Tap to resize

அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தாறுமாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் ரசிகர்கள்.
பிக்பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் ஓவியா போல நடனமாடி அசத்தினார். அதேபோல் யார் பிரச்னைக்கும் செல்லாமல் எதிலும் சிக்காமல் சேஃப் கேம் ஆடி ‘நல்ல பிள்ளை’ என்ற பெயர் பெற்றார்.
உலக நாயகன் கமல் ஹாசன் வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று, கடைசியில் காதலர்கள் என பெயரெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது கவின், லாஸ்லியா காதலிக்கிறார்களா? என்பதே அவர்களது ரசிகர்கள் பட்டாளத்திற்கு மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது.
இதனிடையே லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண வேண்டுமென தமிழ் ரசிகர்கள் தவம் கிடந்தனர். அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக லாஸ்லியா முதன் முதலில் “பிரெண்ட்ஷிப்” என்ற படத்தில் கமிட்டானார்.
நடிகை ஆன பின்னர் அவ்வப்போது அசத்தல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இதுநாள் வரை துளியும் ஆபாசம் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வந்த இவர், சமீப காலமாக குட்டை உடையில் புகைப்படம் வெளியிட்டு அதிர வைத்து வருகிறார்.
மேலும் அவ்வப்போது... ரசிகர்கள் மனதை வசீகரிக்கும், இது போன்ற இதமான சேலை கட்டிய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Latest Videos

click me!