பிக்பாஸ் கேபிக்கு அடித்த ஜாக்பாட்! விஜய்டிவின் சூப்பர் ஹிட் சீரியலில் இரண்டாம் பாகத்தின் கதாநாயகியாகிறார்!

Published : Dec 05, 2021, 04:00 PM IST

குழந்தை நட்சத்திரமாக சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது ஹீரோயின்களுக்கு நிகராக போஸ் கொடுத்து பட வாய்ப்பு தேடி வரும் கேப்ரில்லா தற்போது விஜய் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
19
பிக்பாஸ் கேபிக்கு அடித்த ஜாக்பாட்! விஜய்டிவின் சூப்பர் ஹிட் சீரியலில் இரண்டாம் பாகத்தின் கதாநாயகியாகிறார்!

தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர் கேப்ரில்லா.

29

அதன் பின்னர் மெச்சூர்டான வேடங்களுக்கு அடிபோட்டு வந்த கேபிக்கு அப்படி எதுவும் வாய்ப்புகள் கிடைக்காததால்,  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

39

அர்ச்சனாவின் அன்பு கேங்கில் செல்லக்குட்டியாக வலம் வந்த கேபி, கடைசியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ.5 லட்சம் பணப்பெட்டிடன் கண்ணீர் மல்க வெளியேறியது ரசிகர்கள் மனதை உடைத்தது. 

 
49

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் பெண் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டு அசத்தினார்.

 

59

இதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஆஜித்துடன் படு சுட்டியாக ஆட்டம் போட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அவ்வப்போது தன்னுடைய விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டு பட வாய்ப்பையும் தேடி வந்தார்.

69
Gabriella Charlton vcs

வெள்ளித்திரையில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கேப்ரில்லாவுக்கு தற்போது, விஜய் டிவி சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாவது பாகத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

79

விஜய் டிவி சீரியல்களை பொறுத்தவரை, ஒரு சீரியல் வெற்றி பெற்றால் அதற்க்கு இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது வழக்கம் தான். அந்த வகையில் தற்போது 'ஈரமான ரோஜாவே' சீரியலின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

 

89

2018 ஆம் ஆண்டுமுதல் 2021 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த சீரியலில் நாயகியாக பவித்ராவும், நாயகனாக திரவியம் ராஜ்குமார் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

 

99
Gabriella Charlton vcs

இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில்... கேப்ரில்லா கதாநாயகியாக நடிக்க உள்ளார். விரைவில் இந்த சீரியல் குறித்த தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

click me!

Recommended Stories