ஹீரோ - ஹீரோயின்களை ஓரம் கட்டும் ரொமான்ஸ்... கணவரோடு கலர் ஃபுல்லாக திருமணநாள் கொண்டாடிய அறந்தாங்கி நிஷா!!

Published : Oct 12, 2021, 07:58 PM IST

பட்டி மன்றத்தின் மூலம் தன்னுடைய பேச்சு திறமையை வெளிக்கொண்டு வர துவங்கி, கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒன்றை பெண்ணாக நின்று, காமெடி களத்தில் இறங்கி அடித்தவர் அறந்தாங்கி நிஷா (Aranthangi Nisha). தற்போது இவர் தன்னுடைய 11 ஆம் ஆண்டு திருமண நாளை (11th year marriage anniversary) கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
19
ஹீரோ - ஹீரோயின்களை ஓரம் கட்டும் ரொமான்ஸ்... கணவரோடு கலர் ஃபுல்லாக திருமணநாள் கொண்டாடிய அறந்தாங்கி நிஷா!!

எதிலும் சாதிக்க திறமை இருந்தால் போதும், அழகு ஒரு பொருட்டே இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்து, பலருக்கு எடுத்து காட்டாக இருந்து வருபவர் அறந்தாங்கி நிஷா.

 

 

29

இவர் காமெடி திறமையை நிரூபிக்க, கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை வாயிக்கு வந்த படி பேசினாலும், அவர்கள் அனைவரும் அறந்தாங்கி நிஷாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருவது தான் இவருடைய மிகப்பெரிய வெற்றி.

 

39

அதே நேரத்தில், வளர்ந்து வரும் நேரத்தில் குழந்தை பெற்று கொண்டால் தன்னுடைய கேரியர் பாதித்துவிடும் என என்னும் பலருக்கு இவர் சிறந்த உதாரணம்.

 

49

இவர் கர்ப்பமாக இருக்கும் போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதனை தன்னுடைய சவாலாகவே ஏற்று, சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மட்டும் இன்றி, அழகிய பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

 

59

விஜய் டிவியால் கிடைத்த பிரபலம், இவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நகர்த்தி சென்றது. ஒரு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார்.

 

 

69

பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதன் மூலம் சில விமர்சனங்களை சந்தித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் மீண்டும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.

 

 

79

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி, மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார்.

 

 

89

எவ்வளவு தான் சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும், தன்னுடைய குடும்பத்துடனும் நேரம் செலவழிக்க தவறாத அறந்தாங்கி நிஷா, கடந்த இரு தினங்களுக்கு முன் தன்னுடைய 11 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

 

 

99

தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

 

 

click me!

Recommended Stories