'ஜோதா அக்பர்' ஐஸ்வர்யா ராய்க்கே சவால் விடும் கெட்டப்பில் சாயா சிங்..!! கலக்கல் போட்டோஸ் ஷூட்...

First Published | Oct 12, 2021, 3:56 PM IST

நடிகை சாயா சிங் (Chaya singh), ஜோதா அக்பர் ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai) கெட்டப்பில், தற்போது எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

90 'ஸ் கிட்ஸ் மனதை கொள்ளை கொண்ட நடிகைகளில் ஒருவர் சாயா சிங். தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் இவர், ஜோதாவாக மாறி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் சாயா சிங். பின், நடிகர் தனுஷ் நடித்த, 'திருடா திருடி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

Tap to resize

முதல் படமே, இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'மன்மதராசா பாடல்' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, கவிதை, அருள், ஜெய் சூர்யா, உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்தாலும், முன்னணி இடத்தை பிடிக்கமுடியவில்லை. தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களையும் தேர்வு செய்து நடித்தார். 

பின் கடந்த 2012 ஆம் ஆண்டு, குணச்சித்திர நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 'அனந்தபுரத்து வீடு' படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க துவங்கினர். பின்னர் இரு வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்ட திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்து கொண்டார் சாயா சிங். இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு 'உயிரே உயிரே' படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

 பின் பவர் பாண்டி, உள்குத்து, இரவுக்கு ஆயிரம் கண்கள், பட்டினப்பாக்கம், ஆக்ஷன் போன்ற படங்களில் நடித்தார். மேலும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து, 'ரன்' என்கிற சீரியலிலும் நடித்தார்.

திரைப்படங்களை விட சீரியல்களில் அதிக கவனம் செலுத்தி வரும் வரும், சாயா சிங் தற்போது ஜோதா அக்பர் படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய் கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!