ஜெயிலில் இருக்கும் மகன்... தீவிர மன உளைச்சலால் சாப்பிடாமல், தூங்காமல் தவிக்கும் ஷாருகான்...!

First Published | Oct 12, 2021, 6:27 PM IST

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் (Aryan Khan) தற்போது மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊடகங்களின் அறிக்கையின்படி, ஆர்யன் கானுக்கு வீட்டு உணவுகள் வழங்கப்படுவது  தடைசெய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை உணவு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், மகனுக்கு பல கட்ட முயற்சிகளுக்கு பிறகும் ஜாமீன் கிடைக்காததால் ஷாருக்கான் (Shahrukhkhan) தான் நடித்து வரும் படப்பிடிப்புகளை நிறுத்தியது மட்டும் இன்றி, மகனின் நிலையை எண்ணி கவலையில் சரியாக சாப்பிடாமலும், தூங்காமலும் தவித்து வருகிறாராம்.

ஆர்யன் கானுக்கு ஒருவேளை ஜாமீன் கிடைத்திருந்தால் ஷாருகான் இவ்வளவு கவலையில் இருந்திருக்க மாட்டார். ஆனால் பல கட்ட போராட்டத்திற்கு பிறகும் மகனுக்கு ஜாமீன் கிடைக்காதது ஷாருக்கானை மேலும் வருத்தமடைய செய்துள்ளது.

வெளியில் இருந்து, பார்ப்பதற்கு ஷாருகான் சாதாரணமாக தெரிந்தாலும், அவரது மனம் முழுவதும் கவலையால் சூழ்ந்திருக்கிறது என அவரது நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

Tap to resize

தன்னுடைய மகன் ஜெயிலில் கஷ்டப்பட்டு வருவது, நாளுக்கு நாள் ஷாருக்கானை கவலையடைய வைத்துள்ளதால், சாப்பாடு தூக்கம் இல்லாமல் அவர் நாட்களை கடந்து வருவதாக கூறுகிறார்கள்.

அதே நேரம் தற்போது அவருக்கான பல கால் சீட் இருந்தாலும், தன்னுடைய மகனுக்காக எதிலும் கவனம் செலுத்தாமல் மன உளைச்சலில் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த வாரம், என்சிபி விசாரணையின்போது, ​​ஆர்யான் கான் கடந்த 4 ஆண்டுகளாக போதை மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார் என்கிற தகவல் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!