பாவாடை தாவணியில் தனி அழகு... ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா!!

First Published | Sep 23, 2021, 4:06 PM IST

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா (Aishwarya Dutta ) பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை பரவசப்படுத்தும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் அனைவருமே, ஆரபத்திலேயே வளரும் நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்து விடுவதில்லை. அந்த வகையில் தற்போது வரை தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருபவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

Tap to resize

பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர், என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து முடித்துள்ள படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் அவ்வப்போது படவாய்ப்புகளை பிடிப்பதற்காக படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். இதில் இவரது நடன திறமை அதிகம் ரசிகர்களை ஈர்த்தது.

எப்போதும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து, ரசிகர்களை கிறங்க வைக்கும் ஐஸ்வர்யா... இம்முறை பாவாடை தாவணியில் பளீச் போஸ் கொடுத்துள்ளார்.

பார்ப்பதற்கே மிகவும் மங்களகரமாக உள்ளது இவரது தோற்றம், கை நிறைய வளையல், நெற்றியில் போட்டு, கம்மல் ஜிமிக்கி மற்றும் கலர் ஃபுல் பாவாடை தாவணியில் அம்புட்டு அழகாய் இருக்கிறார்.

இவர் மாடர்ன் உடை போட்டு வெளியிடும் புகைப்படங்களை விட, பாவாடை தாவணியில் அழகு பொங்கும் தேவதையாக இருக்கிறார்.

இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!