Actress Losliya : கும்பலா சேர்ந்து ‘அந்த’ மாதிரி படம் பார்த்தேன்.... நடிகை லாஸ்லியா ஓபன் டாக்

First Published | Mar 31, 2022, 12:13 PM IST

Actress Losliya : முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான், அதுவும் ஒருதலைக் காதல். அந்த பையனுக்கு இப்போ கல்யாணமே ஆகிடுச்சு என நடிகை லாஸ்லியா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பேமஸ் ஆனார். இந்நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதலில் விழுந்த லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின், கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை லாஸ்லியாவுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நடிகை லாஸ்லியா நடிப்பில் முதன்முதலில் நடித்த திரைப்படம் ப்ரெண்ட்ஷிப். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா. கடந்தாண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Tap to resize

முதல் படம் சரிவர ஓடாததால், தான் அடுத்ததாக நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தை பெரிதும் நம்பி உள்ளார் லாஸ்லியா. பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள இப்படத்தில், பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சபரி சரவணன் இயக்கி உள்ளனர். இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இந்நிலையில், நடிகை லாஸ்லியா, சமீபத்திய பேட்டியில் தன்னுடைய முதல் காதல் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான், அதுவும் ஒருதலைக் காதல். அந்த பையனுக்கு இப்போ கல்யாணமே ஆகிடுச்சு. முதல் முத்தம் பற்றி கேட்டபோது, தான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் அப்போது அந்த பையன் தனக்கு முத்தம் கொடுத்தாகவும் லாஸ்லியா கூறினார்.

அதேபோல் அடல்ட் மூவி பார்த்ததுண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, நான் பள்ளியில் படிக்கும் போது எனது ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சுற்றி நின்று போனில் அந்த மாதிரி வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் படத்தை பார்த்தேன். அது அறியாத வயசுல பண்ணது” என தெரிவித்துள்ளார் லாஸ்லியா. 

இதையும் படியுங்கள்.... Ajith : பக்தி Mode-ல் அஜித்... பாரம்பரிய உடையணிந்து கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த ஏ.கே - வைரலாகும் போட்டோஸ்

Latest Videos

click me!