பிக்பாஸ் பாலாவிற்கு பின்னால் இப்படி ஒரு காதல் தோல்வியா..? முதல் முறையாக வெளியான தகவல்..!

First Published | Dec 23, 2020, 12:22 PM IST

பிக்பாஸ் வீட்டில், பயின்வான் பாலாவாக வலம் வரும் இவருக்கு பின்னால் இப்படி ஒரு காதல் கதை உள்ளதா? என பலரையும் பிரமிக்க வைத்துள்ளது சினேகா நாயர் என்பவர் பாலா குறித்து பேசியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் டஃப் கொடுத்து, சூச்சமத்தோடு விளையாடி வரும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் பாலா.
இறுதி போட்டிக்குள் நுழையும் அனைத்து தகுதிகளும் கொண்ட போட்டியாளர் என பாலாவை பிக்பாஸ் ரசிகர்கள் பலர் கூறி வருகிறார்கள்.
Tap to resize

பல நேரங்களில் எதை பற்றியும் கவலை கொள்ளாமல், மிகவும் சந்தோஷமாக இருக்கும் பாலாவிற்கு பின்னால் சோகமான காதல் கதை ஒன்றும் உள்ளது.
ஏற்கனவே பாலா தனது சக போட்டியாளர்களிடம் தனது காதல் தோல்வி குறித்து கூறி உள்ளார் என்பதும் கால் சென்டர் டாஸ்க்கின் போது அர்ச்சனா இது குறித்த கேள்வியை எழுப்பிய போது அந்த கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்து விட்டதையும் பார்த்தோம்.
இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிக்கு, பாலாவின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சினேகா நாயர் கூறியுள்ளார்.
பாலா 5 வருடமாக காதலித்த பெண்ணை, ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்துள்ளார். இந்த காதல் முறிவு ஏற்பட்டு 5 வருடங்கள் ஆன பின்னர், சமீபத்தில் அந்த பெண்ணுக்கு திருமணமும் நடந்துள்ளது.
இந்த திருமணத்தில் பாலா தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து கலந்து கொள்ள நினைத்ததாகவும், இடையில் திடீர் என பிக்பாஸ் வாய்ப்பு வரவே, பாலாவால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என சினேகா நாயர் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!