பல விளம்பரங்களில் தோன்றி, ரசிகர்களை ரசிக்க வைத்த அக்மார்க் தமிழ்நாட்டு மாடல் தான் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். பல பேஷன் ஷோ... மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியவர்.
மாடலிங் துறையில் உள்ள அனுபவத்தை வைத்து பல படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த நடிகை அபிராமிக்கு, முதல் படமே தலயுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு, இவருக்கு அடித்த ஜாக்பார்ட் என்று தான் சொல்ல வேண்டும்.
பாலிவுட் திரையுலகில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த, பிங்க் படத்தின் ரீமேக் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில்... தல நடிப்பில் உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகை அபிராமி வெங்கடாச்சலம் சும்மா கொழுக்கு மொழுக்கு அழகில் மஞ்சள் நிற லெஹங்காவில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த அபிராமி வெங்கடாச்சலம், படம் வெளியாவதற்கு முன்பாகவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பமான முதல் ஓரிரு நாட்களிலேயே கவினை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் முகேன் மீது காதலோடு இருப்பதாக இவர் கூறியது ரசிகர்களுக்கு இவர் மீது வெறுப்பை தான் வரவைத்தது.
இதனால் பெரிதாக இவர் நடிக்கிறாரோ... என பிக்பாஸ் ரசிகர்கள் நினைக்க துவங்கினர். இதன் விளையாவாக வெற்றிபெறும் வாய்ப்பை இழந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவர் நடித்த முதல் படமான 'நேர்கொண்ட பார்வைக்கு' நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், அடுத்தடுத்த பட வாய்ப்புக்கள் கிடைக்காமல் தற்போது வரை திண்டாடி வருகிறார்.
எப்படியும் பட வாய்ப்பை பெற வேண்டும் என்கிற முயற்சியில், தீவிரமாக செயல்படும் அபிராமி... முன்பை விட உடல் எடையை ஏற்றி, மஞ்சள் நிற உடையில் இடையை காட்டியபடி பந்தாவாக தற்போது வெளியிட்டுள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.