மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக, அபிநய்யின் மனைவி, அபர்ணா மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில், தலைமறைவாக இருக்கும் அவரை, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மஞ்சுவின் மகள், கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த நிலையில், நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. எனினும் அவர் விருப்பப்படும் கல்லூரியில் மருத்துவம் படிக்க முடியவில்லை என, மிகவும்... கவலை படுவதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அபர்ணா, மஞ்சு மகள் மருத்துவம் படிக்க ஆசைப்படும் மருத்துவ கல்லூரியில் தனக்கு தெரிந்தவர்கள் உள்ளதாகவும், எனவே... அங்கு சீட் வாங்கி தர 20 லட்சம் பேரம் பேசியதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து, இது குறித்து அபர்ணாவிடம் மஞ்சு சென்று கேட்டபோது... தன்னுடைய நண்பரின் வங்கி கணக்குக்கு தானே அனுப்பினீர்கள் அவரிடமே கேளுங்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து இவர்கள் இருவராலும் அலைக்கழிக்கப்பட்ட, மஞ்சு இது குறித்து... மாம்பலம் காவல் நிலையத்தில் அபர்ணா மற்றும் அஜய் மீது போலீசில் புகார் கொடுத்தார்.