தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் அண்மையில் முடிவடைந்தது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் வென்று ராஜு பிக்பாஸ் 5 டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா 2-வது இடத்தையும், பாவனி 3-வது இடத்தையும் பிடிக்க. அமீர், நிரூப் ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடத்தை பிடித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு அவர்கள் எவ்வளவு நாட்கள் அந்த நிகழ்ச்சியில் இருக்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு சம்பளமும் வழங்கப்படும். அந்த வகையில் பிக்பாஸ் 5-வது சீசனில் அதிகம் சம்பளம் வாங்கியது பிரியங்கா தான். இவருக்கு ஒரு நாளைக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.
இவருக்கு அடுத்தபடியாக ராஜு மற்றும் இமான் அண்ணாச்சிக்கு தலா 40 ஆயிரமும், பாவனிக்கு ரூ.20 ஆயிரமும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் இசைவாணி மற்றும் அக்ஷராவுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரமும், தாமரை, சுருதி, நிரூப், அமீர், அபிஷேக், மதுமிதா ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.
இப்படி இருக்கையில், இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஒருவர் மட்டும் தனக்கு எந்தவித சம்பளமும் வேண்டாம் என சொன்னதாக தகவல் கசிந்துள்ளது. அது வருண் தான். இவர் தனக்கு சம்பளமே வேண்டாம் என்று பிக்பாஸ் குழுவினரிடம் சொன்னதாகவும், அவரை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லாத அக்குழுவினர், குறிப்பிட்ட அமவுண்டை கவுரவ தொகையாக கொடுத்துவிட்டார்களம்.
புகழ் வெளிச்சத்துக்காக தான் வருண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். அவர் நினைத்தபடியே அந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்பில் தற்போது ஜோஷ்வா என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.