பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு புதிய தொகுப்பாளரா? யார் அந்த பிரபலம் வெளியான நியூ அப்டேட்!

Bigg Boss Telugu 9: பிக் பாஸ் தெலுங்கு சீசன் 8 ரியாலிட்டி ஷோ கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், நாகர்ஜூனாவுக்கு பதில் புதிய தொகுப்பாளர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

Bigg Boss Telugu Host Nagarjuna Replaced? mma
Bigg Boss Season 9 Anchor

பிக்பாஸ் தெலுங்கு  முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார்:

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் போது தான்... தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அதன்படி பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம், மற்றும் போட்டியாளர்களை நோக்கி எழுப்பிய கேள்விகள் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றியது. ஆரம்பத்தில் தமிழில் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததோ அதே போல் தெலுங்கிலும் எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதை தாண்டி மக்கள் மனதில் இடம்பிடித்தது.  

Nani Anchoring 2nd Season:

இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார்:

முதல் சீசனை மட்டுமே ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கிய நிலையில், தன்னுடைய திரைப்பட பணிகள் காரணமாக... இவர் விலகிய நிலையில், இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார். இந்த சீசனும் நல்ல வரவேற்பை பெற்றது. நானியும் தன்னுடைய படங்களின் பணி காரணமாக ஒரே சீசனோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.


Nagarjuna Host Last 5 Bigg Boss Season

நாகார்ஜுனா:

எனவே மூன்றாவது சீசனில், புதிய தொகுப்பாளராக மூத்த நடிகர் நாகார்ஜுனா களமிறங்கினார். இதை தொடர்ந்து 5 சீசன்களாக தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கி வரும் நாகார்ஜுனா, பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகவும், இவருக்கு பதில் மற்றொரு நடிகர் புதிய தொகுப்பாளர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

Vijay Devarakonda and Rana

விஜய் தேவரகொண்டா அல்லது ராணா?

தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 6 மற்றும் 7 நிகழ்ச்சி போதிய வரவேற்பை பெறாததன் காரணம் நாகார்ஜுனா சுவாரஸ்யம் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தான் என கூறப்பட்ட நிலையில்... கடந்த சீசனியே, விஜய் தேவரகொண்டா அல்லது ராணா ஆகிய இருவரின் ஒருவர் தான் தொகுத்து வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.

Bigg Boss season 9 Host is Balakrishna?

நந்தமுரி  பாலகிருஷ்ணா:

இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை, பிரபல நடிகரான நந்தமுரி  பாலகிருஷ்ணா தொகுத்து வழங்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக தெலுங்கு வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை நிகழ்ச்சி தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

vuukle one pixel image
click me!