Bigg Boss tamil season 9 this week nominated: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், இந்த வாரம் மொத்தம் 10 போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர் .
விஜய் டிவியில், கடந்த மாதம் 5-ஆம் தேதி துவங்கப்பட்டது பிக்பாஸ் சீசன் 9 . இந்த முறையும் கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் டபுள் விக்ஷன் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதனை உறுதி செய்வது போல் சனிக்கிழமை அன்று துஷார் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து பிரவீன் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேற்றப்பட்டார்.
25
பிரவீன் வெளியேற்றம் ஏற்றுக்கொள்ள முடியாதது:
துஷார் திறமை இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் இருந்ததால் தான் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இது நியாயமாக இருந்தாலும், பிரவீன் தன்னுடைய ஒவ்வொரு டாஸ்க்கையும் நேர்த்தியாக விளையாடி வந்தார். எனவே அவருடைய வெளியேற்றம் ஏற்றுக்கொள்ள முடியாதது என பிக்பாஸ் ரசிகர்கள் பலர் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருவதை பார்க்க முடிகிறது.
35
சீக்ரெட் டாஸ்கில் வென்ற ப்ரஜின்:
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-ஆவது வாரத்தில் 4 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தது வந்துள்ளதால், ஆட்டமும் சூடு பிடித்து வருகிறது. நேற்றைய தினம் கேப்டன்சி டாஸ்கில் திவ்யா, பார்வதி மற்றும் சபரி ஆகிய மூன்று பேர் இடம்பெற்ற நிலையில், தனக்கு போட்டியாக இருந்த பார்வதியை தாக்கிவிட்டு சபரி கேப்டன் ஷிப் டாஸ்கில் வெற்றி பெற்றார். அதேபோல் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளரான சாண்ட்ராவுக்கு பிக்பாஸ் சீக்ரெட் டாக் ஒன்றை கொடுத்தார். அந்த டாஸ்கில் தன்னுடைய பார்ட்னராக சாண்ட்ரா தன்னுடைய கணவரான ப்ரஜினையே சேர்த்து கொண்டார்.
45
சுபிக்ஷவின் நேரடி நாமினேஷன்:
இந்த டாஸ்கில் சாண்ட்ரா வெற்றி பெற்றதால், தனக்கான நாமினேஷன் ப்ரீ போனஸை பிரஜினுக்கு விட்டு கொடுத்தார். அதே போல் ஒருவரை நீங்கள் நாமினேட் செய்யலாம் என கூறியதால்... சாண்ட்ரா - ப்ரஜின் இருவரும் சுபிக்ஷனை நேரடியாக நாமினேட் செய்தனர். இவர்களை தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளரும், இரண்டு பேரை தகுந்த காரணங்களோடு நாமினேட் செய்தனர்.
55
நாமினேஷனில் இடம்பற்ற 10 போட்டியாளர்கள்:
இதன் மூலம் மொத்தம் 10 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனை சந்திக்க உள்ளனர். குறிப்பாக இந்த வாரம் முதல் முறையாக கனி நாமினேஷனுக்குள் வந்துள்ளார். மேலும் வியானா, விக்ரம், சாண்ட்ரா , ரம்யா, பார்வதி, திவாகர், திவ்யா, மற்றும் அரோரா நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் யார் இந்த முறை வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.