Bigg Boss Tamil Season 8, Jacquline Evicted by Task
Jacquline Evicted in Cash Task Girl Fan Admitted in Hospital : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளை 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுக்குள்ள பிக் பாஸ் முடிய போகிறது என்ற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும் டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்து கொள்வதில் அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
Bigg Boss 8 Tamil, BB Tamil Season 8, Jacquline Elimination
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதிப் போட்டியாளர்களின் பட்டியலில் விஷால், முத்துக்குமரன், ராயன், பவித்ரா, சவுந்தர்யா ஆகிய 5 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில், 5, 4, 3 (இடங்களின் வரிசை) என்று போட்டியாளர்கள் நாளை வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது. எஞ்சிய 2 போட்டியாளர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார்.
Jacquline Eliminated by Cash Grab Task
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது ஆரம்பத்தில் 18 பேருடன் தொடங்கினாலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்கள் எண்ட்ரி கொடுத்தனர். இதன் மூலமாக முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது 24 போட்டியாளர்களுடன் களமிறங்கியது.
Jacquline Lydia, Bigg Boss Tamil Season 8
இறுதிப் போட்டிக்கு முன் வைக்கப்பட்ட கேஷ் பாக்ஸ் டாஸ்க்கில் ஜாக்குலின் தோல்வி அடைந்து இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். போட்டியிலிருந்து வெளியேறும் போட்டியாளர்கள் டம்மி டிராபியை உடைத்துவிட்டு தான் வெளியேறுவார். ஆனால், ஜாக்குலின் அதே டிராபியுடன் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
Jacquline Evicted By Money Cash Task
இந்த நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றும் யோசிக்காத நிலையில் கேஷ் பாக்ஸ் டாஸ்கிலிருந்து வெளியேறினார். இது அவரது ஆர்மி ரசியினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஜாக்குலின் வெளியேற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத ரோஷினி ரவிஷங்கர் என்ற ரசிகை மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அந்த ரசிகை தனது எக்ஸ் தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
Jacquline Bigg Boss Tamil Season 8
அதில், உங்கள நம்பி ஷோ பார்த்ததற்கு இப்போ எங்க கொண்டு வந்துவிட்டீங்கனு பாத்தீங்களா என்று பதிவிட்டுள்ளார். அதோடு, ஜாக்குலின் உங்களுக்கு போர்க்குணம் ஜாஸ்தி தான். மேலும், மஞ்சரி மற்றும் தீபக் ஆகிய இருவரும் கூட இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள் தான். நான் இப்போது நன்றாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு டிரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.