வைல்டு கார்டும் வேஸ்ட்டா? பழைய போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்பும் பிக்பாஸ்!

Published : Nov 03, 2025, 03:37 PM IST

Bigg Boss Sends Former Contestants: பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஏற்கனவே, போட்டியாளர்களாக இருந்தவர்கள் சிலரை தேர்வு செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

PREV
14
பிக்பாஸ் 9 நிகழ்ச்சி:

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது... பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் 9 நிகழ்ச்சி ஒரு மாதத்தை நெருங்கி வருகிறது. முதல் நாளில் 10-ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள், மற்றும் 1 திருநங்கை போட்டியாளர் உள்ளே சென்ற நிலையில் முதல் வாரத்தில் இருந்தே நாமினேஷன் படலம் துவங்கியது.

24
கலையரசன் வெளியேறினார்:

முதல் வாரத்தில், யாரும் எதிர்பாராத விதமாக மூத்த இயக்குனர் பிரவீன் காந்தி மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறுவதற்கு முன்பே, அதாவது 5 நாளிலேயே மன அழுத்தத்திற்கு ஆளான ஆர் ஜே நந்தினி தானாக முன் வந்து வெளியேறினார். இவர்களை தொடர்ந்து அடுத்தடுத்த வாரத்தில், திருநங்கை அபிசாரா, ஆதிரை, ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற, கலையரசன் வெளியேறினார்.

34
வைல்டு கார்டு:

அதே போல் பிக்பாஸ் வீட்டில் சண்டை போடுவதை மட்டுமே ஸ்டேடர்ஜியாக வைத்திருக்கும், போட்டியாளர்களை அதில் இருந்து வெளியே கொண்டு வர... இந்த வாரம் பிரஜின், அவரது மனைவி சாண்டரா எமி, சீரியல் நடிகர் அமித் பார்கவ், மற்றும் சீரியல் நடிகை திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு கண்டெஸ்டெண்டாக களமிறங்கி உள்ளனர். புதிய போட்டியாளர்களின் என்ட்ரியால் ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
பிக்பாஸ் ஹோட்டல் டாஸ்க்:

இதை தொடர்ந்து பிக்பாஸ் ரேட்டிங்கை கூட்ட மெகா பிளானோடு, ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி சில பழைய போட்டியாளர்களை வீட்டுக்குள் கொண்டு வர பிளான் போட்டுள்ளாராம். அதன்படி அடுத்த வாரம்... பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்க் நடைபெற உள்ளதாம். இதில் கெஸ்ட் ஆக முந்தைய சீசன் போட்டியாளர்கள் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார்களாம். இதன் மூலமாக பிக் பாஸ் மீண்டும் பேசப்படும் நிகழ்ச்சி பேசுபொருளாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories