சைலண்டாக நடந்து முடிந்த பிக் பாஸ் சம்யுக்தாவின் 2வது திருமணம்... பிரபல கிரிக்கெட் வீரரை மணந்தார்

Published : Nov 27, 2025, 01:50 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன சம்யுக்தா, கடந்த ஆண்டு தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்த நிலையில், இன்று அவர் கிரிக்கெட் வீரரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.

PREV
14
Bigg Boss Samyuktha Shan Second Marriage

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் சம்யுக்தா. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய சம்யுக்தா, விஜய்யின் வாரிசு, சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் போன்ற படங்களில் நடித்தார். சம்யுக்தாவின் முதல் கணவர் பெயர் கார்த்திக். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் இருக்கிறார். துபாயில் வேலை பார்த்து வந்த கார்த்திக், நீண்ட நாட்களாக இந்தியா வராமல் இருந்ததால் அவர்மீது சந்தேகம் வர, அதன்பின் சம்யுக்தா விசாரித்ததில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு துபாயில் செட்டிலாகிவிட்டார் என தெரியவந்திருக்கிறது.

24
பிக் பாஸ் சம்யுக்தாவுக்கு இரண்டாவது திருமணம்

நான்கு ஆண்டுகளாக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்ததும், கார்த்திக்கிடம் இருந்து விவாகரத்து கேட்டிருக்கிறார் சம்யுக்தா. ஆனால் விவாகரத்து தராமல் மூன்று ஆண்டுகளாக இழுத்தடித்த கார்த்திக்கிடம் இருந்து கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றார் சம்யுக்தா. விவாகரத்து பெற்ற கையோடு விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில், அவருக்கு இரண்டாம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

34
சம்யுக்தாவின் இரண்டாவது கணவர் யார்?

சம்யுக்தா இரண்டாவது திருமணம் செய்துள்ள நபர் வேறுயாருமில்லை, பிரபல கிரிக்கெட் வீரரான அனிருதா ஸ்ரீகாந்த் தான். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் தான் இவர். அனிருதா ஸ்ரீகாந்த், ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடி இருக்கிறார். இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவரும், சம்யுக்தாவும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இது அனிருதா ஸ்ரீகாந்துக்கும் இரண்டாவது திருமணம் தான்.

44
அனிருதா - சம்யுக்தா காதல் கதை

அனிருதா ஸ்ரீகாந்தின் முதல் மனைவி ஆர்த்தியின் தோழி தான் சம்யுக்தா. ஆர்த்தியை அனிருதா விவாகரத்து செய்த பின்னர் தான் சம்யுக்தா உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த சில மாதங்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சம்யுக்தா - அனிருதாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் செம வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories