பிக் பாஸ் ஜூலிக்கு நடந்த ரகசிய நிச்சயதார்த்தம்; வருங்கால கணவர் யார்? திருமணம் எப்போது?

Published : Dec 07, 2025, 09:55 AM IST

Bigg Boss Julie Gets Secret Engagement : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ஜூலிக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணமும் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

PREV
14
பிக் பாஸ் தமிழ் ஜூலி நிச்சயதார்த்தம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரது கவனம் ஈர்த்த ஜூலி விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஊரறிய உலகம் முழுவதும் பிரபலமான பிக் பாஸ் ஜூலிக்கு ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எந்தப் படமும் அவருக்கு பெயரும், புகழும் கொடுக்கவில்லை. இவ்வளவு ஏன் பிக் பாஸ் தாமரைக்கு கிடைத்த வரவேற்பு கூட ஜூலிக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.

24
பிக் பாஸ் ஜூலி, ஜூலியானா

அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார். இந்த நிலையில் தான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை பகிர்ந்து #Engaged #ISaidYes #Engagement #FutureMrs #FutureMr #Bridetobe#Groomtobe #Love #CoupleGoals என்று ஹெஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். ஜூலி காதலித்து வந்த அவரது காதலருடன் தான் இப்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ஆனால், அவர் யார் என்ற விவரங்களை வெளியிடவில்லை. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

34
பிக் பாஸ் ஜூலி நிச்சயதார்த்தம்

ஜூலி பகிர்ந்த புகைப்படங்களோடு என்னுடைய உலகம் முழுவதையும் அர்த்தமுள்ளதாக்கும் மனிதனிடம் மேலும் வெறித்தனமாக இருக்க முடியாது. நான் பிரார்த்தனை செய்த அனைத்தும் அவர் தான். இப்போது அவர் என்றென்றும் என்னுடையவர். மோதிரம் மாற்றிக்கொள்ளப்பட்டது. இதயம் நிறைந்தது. அவரை பார்க்க நீங்கள் காத்திருக்க வேண்டும் ஆனால் இப்போதைக்கு, அவர் தான் எனக்கு ஏற்ற சரியானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

44
பிக் பாஸ் ஜூலி வருங்கால கணவர்

ஆனால், எப்போது திருமணம் என்று அவர் குறிப்பிட்டவில்லை. எப்படியும் வரும் 2026 ஆம் ஆண்டு தான் திருமணம் நடக்கும், பிறக்கும் ஆங்கில புத்தாண்டு ஜூலியின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வருடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories