சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜூஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த வைரல் போட்டோ!

First Published Jun 11, 2021, 3:52 PM IST

அந்த 9 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு சுட்டிக்குழந்தை மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜூஸ் கொடுக்கப்பட்டது. 

காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசை வலியுறுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். 2008ம் ஆண்டு ஒகேனக்கல் பிரச்சினைக்காக சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ரஜினி, தண்ணீர் தர மறுப்பவர்களை உதைக்க வேண்டாமா? என ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
undefined
அதேபோல் தனி ஆளாக நின்றும் காவிரி பிரச்சனைக்காக போராடி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதாவது 2002ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி காவிரி நதிநீர் வேண்டி சென்னை சேப்பாக்கத்தில் ரஜினி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
undefined
9 மணி நேரம் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், இடத்தை விட்டு எங்கும் நகராமல் சிங்கிள் சிங்கமாக போராட்டம் நடத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போது அவருக்கு ஆதரவாக ஓட்டுமொத்த நடிகர் சங்கமும் வந்திருந்தது.
undefined
அந்த 9 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒரு சுட்டிக்குழந்தை மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜூஸ் கொடுக்கப்பட்டது. அந்த பெண் குழந்தையிடம் இருந்து ஜூஸை வாங்கிப் பருகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதனை அந்த குழந்தைக்கும் ஊட்டிவிட்டார்.
undefined
தற்போது அந்த வரலாற்று சிறப்பு மிக்க க்யூட் புகைப்படத்தை பிக்பாஸ் பிரபலம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த குழந்தை வேறு யாரும் அல்ல பிரபல நடிகை ரேகாவின் மகள் தான்.
undefined
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேகா. அதன் பின்னர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வர ஆரம்பித்துள்ளார். ரேகா தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி மகளுடன், சூப்பர் ஸ்டார் இருக்கும் புகைப்படத்துடன், தன்னுடைய மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
undefined
“புகைப்படமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த தருணத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு ரஜினிஃபைடு 2கே கிட்ஸ்க்கு நன்றி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தனது 9 மணிநேர உண்ணாவிரதத்தை காவிரி பிரச்சனை சூழலில் முடித்தபோது, ​​என் மகள் கொடுத்த ஒரு கிளாஸ் ஜூஸைப் பருகினார். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவும், ஒரு நல்ல காரணத்தின் ஒரு பகுதியாகவும் அவள் ஆசீர்வதிக்கப்பட்டாள்” என பதிவிட்டுள்ளார்.
undefined
click me!