விரைவில் கைதாகிறார் மீரா மிதுன்?... 5 பிரிவுகளின் கீழ் அதிரடி வழக்குப்பதிவு... கேரளா வரை நீண்ட சர்ச்சை...!

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீரா மிதுன் மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு  உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வந்ததும், அதே போல் கமல், திரிஷா போன்றோர் ஜாதி ரீதியில் தான் தற்போது வரை, தமிழ் சினிமாவில் நிலைத்துள்ளனர் என்றும் தரக்குறைவாக விமர்சித்தார்.
சர்ச்சைக்கு போன மீரா மிதுன் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா ஆகியோரை வாய்க்கு வந்தபடி தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.

அதன் உச்சபட்சமாக நடிகர் விஜய், விஜயின் மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா, சூர்யாவின் மனைவி ஜோதிகா இவர்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் புகார் கொடுத்து வந்தனர்.
அதன் பின்னர் விஜய், சூர்யாவிற்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி, ஷாலு ஷம்முவையும் மீரா மிதுன் விட்டு வைக்கவில்லை. அவர்களை சகட்டுமேனிக்கு விளாசினார்.
இதையடுத்து நடிகைகள் சனம் ஷெட்டியும், ஷாலு ஷம்மு இருவரும் தங்களைப் பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தற்போது மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ராஸ் மிடாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மீரா மிதுன் தன்னைப் பற்றி அருவருக்கத் தக்க வகையில் சோசியல் மீடியாவில் பேசி வருவதாகவும் கூறினார்.
மேலும் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீரா மிதுன் மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் தனி நபர் மீது தாக்குதல் நடத்தும் விதமாக பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Videos

click me!