நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீயாய் நடந்து வருகின்றன.
இதையடுத்து லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷனும் ஒன்றாக இணைந்து டான் என்ற படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா , சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி ஷிவாங்கி, ஆர்ஜே விஜய், முனீஸ்காந்த், பாலா சரவணன், காளி வெங்கட் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
கடந்த 11ம் தேதி அன்று கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டான் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பமானது. அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. தற்போது விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஒருவரும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஷாரிக், இவர் திரைப்பிரபலங்களான ரியாஸ் கான், உமா ரியாஸின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது ஷாரிக் டான் படத்தில் இணைந்துள்ளதை அவருடைய அம்மா உமா ரியாஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
குக் வித் கோமாளி ஷிவாங்கியுடன் ஷாரிக் விமானத்தில் பயணம் செய்யும் போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உமா ரியாஸ், கலக்குங்க ஷிவாங்கி, ஷாரிக் #Don என பதிவிட்டுள்ளார்.