பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் ரியோ செய்த தரமான சம்பவம்... வைரலாகும் போட்டோ....!

First Published | Oct 4, 2020, 10:06 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் அசத்தலாக நடனம் ஆடி அறிமுகமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்களை விட முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ள செட்டில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதுவரை 10 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பிலிருந்தே ரியோ ராஜ் பெயர் லிஸ்டில் இடம் பெற்றிருந்தது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் 5 ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
Tap to resize

“சரவணன் மீனாட்சி” சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் மனதை கவர்ந்த ரியோ ராஜ் தற்போது பிக் பாஸ் 4வது சீசன் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் படத்தில் இடம் பெற்ற பாடல் மூலம் அசத்தலாக நடனம் ஆடி அறிமுகமாகியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக நுழைந்தார் ரியோ ராஜ், அவர் உள்ளே நுழைவதற்கு முன்பே பிரியாணியுடன் செம்ம விருந்து டைனிங் டேபிளில் தயாராக இருந்தது.
அடுத்தடுத்து போட்டியாளர்கள் வர ஆரம்பித்த போது எல்லாரும் வந்த பிறகு சாப்பிடலாம் என பேசிக்கொண்டனர். ஆனால் 7வது போட்டியாளரான ஜித்தன் ரமேஷ் உள்ளே வருவதற்கு முன்பே சோலோவாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார் ரியோ ராஜ். அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Latest Videos

click me!