கொரோனாரா ஊரடங்கில் கிடைத்த ஓய்வு.. உறுப்படியான வேலையை பார்த்த பிக்பாஸ் மதுமிதா!

First Published | Jul 29, 2020, 5:01 PM IST

உதயநிதி தமிழில் அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில், நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் பிக்பாஸ் மதுமிதா.
 

முதல் படத்திலேயே தேனடையாக வந்து... ஜாங்கிரியாக மனதில் ரசிகர்கள் மனதில் நிலைத்தார்.
எனவே இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் மதுமிதா காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார்.
Tap to resize

மேலும் கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய இவர், மக்கள் ஆதரவு இருந்த போதிலும், தற்கொலை முயற்சியை கையில் எடுத்ததால் இந்த வீட்டில் இருந்து வெளியேறினார்.
பின்னர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக குறிப்பிட்ட தொகையை விஜய் டிவி கொடுக்கவில்லை என்றும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அணைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்த பின், மீண்டும் பழையபடி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் மதுமிதா.
இந்நிலையில் தற்போது கொரோனா பிரச்சனை இருப்பதால், திரைப்பட பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் மதுமிதாவுக்கு வீட்டிலேயே உள்ளார்.
கிடைத்த ஓய்வில் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்த மதுமிதா, கார் மற்றும் வண்டி ஓட்ட கற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இனி எங்கு செல்வதாக இருந்தாலும் யாருடைய தயவும் வேண்டாம், தனியாக சென்று தனியாக வருவேன் என தில்லாக கூறுகிறார் மது.

Latest Videos

click me!