இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். பிக்பாஸ் சீசன் 1-ல் எப்படி ஓவியாவிற்கு குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் பட்டாளம் குவிந்ததோ அதேபோல் லாஸ்லியாவிற்கு ஆர்மிகள் தூள்பறந்தது.
அவரது க்யூட்டான ஸ்மைல் மற்றும் பப்ளியான முகத்தோற்றமே அவரை பலருக்கும் பிடித்து போக வைத்தது. பிக்பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் ஓவியா போல நடனமாடி அசத்தினார். அதேபோல் யார் பிரச்னைக்கும் செல்லாமல் எதிலும் சிக்காமல் சேஃப் கேம் ஆடி நல்ல பிள்ளை என்ற பெயர் பெற்றார்.
இடையே கவின் - லாஸ்லியா காதல் விவகாரம் வேறு விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி.க்கு பக்க பலமாக இருந்தது. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, இருவரும் காதலர்கள் போல் நடந்து கொண்டாலும் வெளியே வந்ததும், இருவருக்கும் சம்மந்தமே இல்லாதது போல் நடந்து கொண்டனர்.
சினிமாவில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து உள்ள லாஸ்லியா ஸ்லிம் லுக்கில் பார்க்க செம்ம க்யூட்டாக மாறிவிட்டார். லாஸ்லியா, ஆரியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படத்திற்கு பிப்ரவரி மாதம் பூஜை போடப்பட்டு, அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் ஹர்பஜன் சிங், அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் ஃபிரன்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
வெள்ளித்திரையில் காலடி எடுத்த வைத்த பின்னர் போட்டோ ஷூட் இல்லாவிட்டால் எப்படி, லாஸ்லியாவும் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அந்த போட்டோஸ் எல்லாமே படு ஜோராக சோசியல் மீடியாவில் வைரலாகிவிடுகின்றன.
தற்போது லெமன் யெல்லோ நிற புடவையில் செம்ம அழகான ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி முடிந்துள்ளார்.
முகத்தில் ஜொலிக்கும் அழகை பார்த்து ரசிக்கவே தனியா நேரம் வேணும்
எவ்வித ஆடம்பரமும் இல்லாத சிம்பிளான இந்த புடவையில் லாஸ்லியா வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.
உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள லாஸ்லியாவை பார்த்து அவருடைய ரசிகர்களே வாய்பிளக்கின்றனர். அந்த அளவிற்கு அழகாக இருக்கிறார்.
முகத்தில் ஜொலிக்கும் அழகை பார்த்து ரசிக்கவே தனியா நேரம் வேணும்