Vijay First A Certified Film : விஜய் நடித்த ஜன நாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன் ஏ சர்டிபிகேட் வாங்கிய தளபதி படம் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு, மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த சென்சார் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
CBFC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, 'ஜன நாயகன்' திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 183 நிமிடங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதையடுத்து, படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
24
விஜய்யின் முதல் ஏ சர்டிபிகேட் படம்
விஜய் படங்களுக்கு பெரும்பாலும் யு அல்லது யு/ஏ சான்றிதழ் தான் கிடைக்கும். ஆனால் ஜனநாயகனுக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதை பார்த்ததும் ஏராளமானோர் முதன்முறையாக அவர் படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பே விஜய் படம் ஒன்றிற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
அந்த படத்தின் பெயர் பகவதி, அதற்கு ஏன் ஏ சான்றிதழ் என்று தானே யோசிக்கிறீர்கள். அந்த சமயத்தில் சென்சார் போர்டு ரொம்ப ஸ்ட்ரிக்டாம். படத்தில் ஒரு ஆக்ஷன் காட்சியில் சிறிதாக ரத்தம் வருவதை காட்டினாலே ஏ சான்றிதழ் கொடுப்பார்களாம். அதனால் தான் பகவதி படத்திற்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.
34
ஜன நாயகன் சென்சார் சர்ச்சை
ஜன நாயகன் திரைப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காட்சிகள் மத உணர்வுகளை பாதிக்கக்கூடும் என்ற காரணத்தால், CBFC சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்ததால் வெளியீடு தள்ளிப்போனது.
பின்னர், இந்த விவகாரம் நீதிமன்றத்தை சென்றடைந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்குமாறு CBFC-க்கு உத்தரவிட்டார். எனினும், அந்த உத்தரவை எதிர்த்து CBFC மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி உடனடி நிவாரணம் கோரியது. இந்த சட்டப் போராட்டம் காரணமாகவே திரைப்படத்தின் வெளியீடு பல மாதங்கள் தாமதமானது. இதற்கிடையில், 'ஜன நாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்சார் சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 'ஜன நாயகன்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.