இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷுக்கு வெற்றிகரமான ஆண்டாக துவங்கி உள்ளது. தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக, இவர் நடித்திருந்த 'தசரா' திரைப்படம் வெளியாகி தாறுமாறு ஹிட் அடித்த நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பின் தமிழ் சினிமாவிலும் வெற்றி வாய்ப்பை தன்வசப்படுத்தியுள்ளார்.
மகாநடி வெற்றிக்கு பின்னர்... இவர் நடிப்பில் வெளியான சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, பென்குயின், போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தது. மேலும் விஜய்க்கு ஜோடியாக நடித்த சர்க்கார், ரஜினிக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த போன்ற படங்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக டல் அடித்தட்டு.
ஆனால் இன்று வெளியாகியுள்ள 'மாமன்னன்' படம் கீர்த்தி சுரேஷுக்கு விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற செய்துள்ளது. கம்யூனிசம் பேசும் அழுத்தமான ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இன்று காலை முதலே உதயநிதி மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜுடன் பல்வேறு, திரையரங்குகளுக்கு விசிட் அடுத்து, ரசிகர்களுடன் 'மாமன்னன்' பட வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், இந்த தருணத்தை மேலும் ஸ்பெஷல் ஆக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில்... ஸ்டைலீஷில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடுவது போல், அழகு தேவதையாக ஜொலிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.