கடந்த 2013ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான "ராஜா ராணி" திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் "One Cappuccino ப்ளீஸ் என்று ஹோட்டலில் கேட்கும் அதே பெண், வீட்டில் தனது தாயிடம் ஒரு காபி கொடுமா என்று கேட்டால் எப்படி இருக்கும்" என்பது குறித்த ஒரு காட்சி வரும். அந்த பெண்ணை யாராலும் அவ்வளவு சீக்ரம் மறந்துவிட முடியாது, அந்த கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
அந்த படத்திற்கு பிறகு தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என்று வெவ்வேறு மொழிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகளாக இவர் நடித்திருந்தார், அந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது என்றே கூறலாம்.
அதனை தொடர்ந்து தல அஜித்தின் விசுவாசம், ஆர்யா நடிப்பில் டெடி, சுந்தர். சி-யின் அரண்மனை பாகம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார் சாக்ஷி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3ம் பாகத்தில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். அகர்வால் இறுதியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான பகீரா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
இதுவரை சாக்ஷி 16 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் இந்த 2023ம் ஆண்டில் மட்டும் சுமார் ஆறு திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் வெளியாக காத்திருக்கிறது. அதில் 120 Hours என்ற திரைப்படம் ஒரு ஆங்கில திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி "ஸ்டைல் என்றால் நாம் பேசாமலே நாம் யாரென்பதை சொல்லும் ஒரு கலை" என்று தலைப்பிட்டு ஒரு போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.