டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பீஸ்ட். விஜய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மலையாள நடிகையான இவர் பீஸ்ட் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நேற்று 100 நாட்களை எட்டியது. இதனை படக்குழு ஆடிப் பாடி கொண்டாடி உள்ளது. அப்போது எடுத்த புகைப்படத்தை படத்தின் இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யின் ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய்யை அடுத்து அந்த புகைப்படத்தில் அதிகம் கவனம் ஈர்த்தது நடிகை அபர்ணா தாஸ் தான்.
பீஸ்ட் படக்குழு வெளியிட்ட ஒற்றை புகைப்படத்திலேயே அப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவை ஓரங்கட்டியுள்ள அபர்ணா தாஸுக்கு, இப்படம் வெளியான பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.