
Ravi Mohans luxury bungalow தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரவி மோகன் தற்போது கராத்தே பாபு, ஜெனீ, பராசக்தி, தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் வங்கி அவரது வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆனால் அந்த நோட்டீஸை ரவி மோகன் வாங்க மறுத்ததோடு வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். அது என்ன, ஏன் வங்கி நோட்டீஸ் அனுப்பியது என்பது பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
சமீபகாலமாக ரவி மோகன் தொடர்பான தனிப்பட்ட வாழ்க்கை செய்தி தான் தலைப்புச் செய்திகளில் வந்த வண்ணம் இருக்கிறது. சினிமா பிரபலமான ரவி மோகன் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ், ஆர்யன் என்று 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஆரவ் ரவி மோகன் உடன் இணைந்து டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்ததிலிருந்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். நாள்தோறும் அவரைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருப்பதோடு ரவி மோகன் மற்றும் பாடகியான கெனிஷா தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி பிரிவுக்கு கெனிஷா தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ரவி மோகன் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.6 கோடி பெற்றுள்ளார். ஆனால், அந்தப் படத்தில் நடிக்காமலும், அந்தப் படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமலும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தான் அந்த நிறுவனம் இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்தது. இந்த நிலையில் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய மனுதாக்கல் செய்யுமாறு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட ரூ 6 கோடி பணத்தை திருப்பி செலுத்தக் கோரி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிக் ரவி மோகன் தனது சொத்து தொடர்பான பட்டியலை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக அவரது சொத்துக்களை ஜப்தி செய்ய மனுதாக்கல் செய்யுமாறு அனுமதி அளித்தது.
இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பாபி டச் கோல்டு யூனிவர்ஸ் நிறுவனம் சார்பில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்திரன் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் எங்களிடம் பெற்ற பணத்தை வட்டியுடன் சேர்த்து திரும்ப கேட்கிறொம் என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரவி மோகனின் சொத்துக்களை முடக்க மனுதாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்திற்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில் வங்கியிடமிருந்து லோன் பெற்று அதனை திரும்ப செலுத்தாத நிலையில் வங்கி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
ரவி மோகன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வாழ்வதற்கு சென்னை ஈசிஆரில் சொகுசு பங்களா ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார். ஏற்கனவே ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் எச்டிஎஃப் சி வங்கியிடமிருந்து பெற்ற கடன் தொகையை திரும்ப செலுத்த வங்கி பல முறை கேட்டும் 10 மாதங்களாக தவணை கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதன் காரணமாக வங்கியிடமிருந்து பெற்ற கடன் தொகையை செலுத்தாநிலையில் வங்கி அவரது வீட்டை ஜப்தி செய்ய போவதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அந்த நோட்டீசை வாங்க மறுத்த ரவி மோகன் வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.