Meena Parents Learns Truth : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலுக்கு அரசு வேலை கிடைக்க யார் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தது என்ற உண்மை தெரிந்த மீனாவின் அப்பா அதிர்ச்சி அடைந்தார்.
அரசு வேலைக்கு யார் பணம் கொடுத்தது? உண்மையை தெரிந்து கொண்ட மீனாவின் அப்பா? நடந்தது என்ன?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 568ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஒவ்வொரு நாளும் விதவிதமான காட்சிகளுடன் புதிய புதிய டுவிஸ்டுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் பாண்டியன் கீழே விழுந்து கால் மற்றும் கை விரலில் கட்டு போட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரை பழனிவேல் மற்றும் சரவணன் இருவரும் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளார்.
24
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
வீட்டிற்குள் நுழைந்த உடன் அவரை பார்த்த தங்கமயில் கத்த ஆரம்பித்துவிட்டார். இதைத் தொடர்ந்து மீனா, கோமதி, அரசி, கதிர், சுகன்யா என்று வீட்டில் உள்ள அனைவரும் வர ஒவ்வொருவரும் என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று பதற்றத்துடன் கேட்டனர். இதைத் தொடர்ந்து மீனாவின் அப்பாவும், அம்மாவும் வந்தனர். அவர்கள் குல தெய்வ கோயிலுக்கு அழைக்க குடும்பத்தோடு வருவதாக பாண்டியன் வாக்குறுதி அளித்தார். அப்போது எதிர்பாராத விதமாக செந்திலுக்கு கிடைத்த அரசு வேலையைப் பற்றி பழனிவேல் பேச ஆரம்பிக்க, அதற்கு பணம் கொடுத்து உதவி செய்தது எல்லாம் பாண்டியன் என்று சொல்ல உடனே சுகன்யா அதெல்லாம் இல்லை.
34
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
மீனா தான் அதற்கான பணத்தை அலுவலகத்தில் லோன் போட்டு கொடுத்து உதவி செய்தார் என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார். மேலும், நீயே இப்போது தான் வேலைக்கு சேர்ந்திருக்கிற, அதற்குள்ள ஏன் ரூ.10 லட்சத்திற்கு லோன் போட்ட என்று கேட்டு சண்டையிட்டு கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஏற்கனவே பாண்டியனுக்கு அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுத்து சேர்ந்தது பிடிக்கவில்லை. இந்த சூழலில் மீனாவின் அப்பாவிற்கு தனது மகள் ரூ.10 லட்சம் கொடுத்து அவரது கணவருக்கு வேலை வாங்கி கொடுத்தது பிடிக்கவில்லை. அவருக்கு மீனாவின் மாமனார் தான் காசு பணம் கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது தான் அவருக்கு இந்த உண்மை தெரிந்திருக்கிறது.
44
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் - மீனா மற்றும் மீனாவின் அப்பா
இனி எதிர் வீட்டிலிருக்கும் சக்திவேல் மற்றும் முத்துவேல் ஆகியோருக்கு தெரிய வந்தால் எப்படியும் செந்திலின் அரசு வேலை பறிபோவது மட்டுமின்றி மீனாவின் வேலைக்கும் ஆபத்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு வேலை கிடைக்க அரசு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டே லஞ்சம் கொடுத்ததாக கூறி அவரது வேலை பறிக்கப்படும் என்று தெரிகிறது. எப்படியும் இனி வரும் காலங்களில் இப்படியொரு காட்சிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒளிபரப்பு செய்ய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.