Movie Theater Etiquette: மூவி பார்க்க தியேட்டர் போறீங்களா? இந்த 10 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!

Published : Sep 04, 2026, 05:08 PM IST

Movie Theater Etiquette: தியேட்டரில் படம் பார்க்கும்போது செல்போன் பயன்படுத்துவது, சத்தமாக பேசுவது, Seat-ஐ காலால் தட்டுவது, Spoiler சொல்வது முதல் Popcorn சாப்பிடுவது வரை கவனிக்க வேண்டிய 10 முக்கியமான Cinema Etiquette பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
19
செல்போனை Silent-ல் வையுங்கள்.

படம் தொடங்கியதும் Mobile-ஐ Silent அல்லது Do Not Disturb Mode-ல் வைத்துவிட்டு பாக்கெட் அல்லது Bag-ல் வைத்துவிடுவது நல்லது. படம் ஓடும்போது போன் பேசினால் அருகில் இருப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். முக்கியமாக, அடிக்கடி Screen-ஐ On செய்து Message பார்ப்பது அருகில் இருப்பவர்களின் கவனத்தை சிதறடிக்கும். இருட்டான தியேட்டரில் சிறிய Phone Screen வெளிச்சம்கூட மிகவும் கவனத்தை ஈர்க்கும்.

29
படம் ஓடும்போது Chat செய்யாதீங்க

ஒரு Message மட்டும் Reply பண்ணுறேன் என்று ஆரம்பித்து, தொடர்ந்து WhatsApp, Instagram, Social Media என Phone-ஐ பயன்படுத்துவது படத்தை மட்டுமல்ல, சுற்றியிருப்பவர்களையும் பாதிக்கும். மிகவும் அவசியமான Call என்றால் மட்டும் தியேட்டருக்கு வெளியே சென்று பேசுவது நல்லது.

39
சத்தமாக பேசாதீங்க

Comedy Scene-க்கு சிரிப்பது, பிடித்த Hero Entry-க்கு கைத்தட்டுவது போன்றவை Cinema Experience-ன் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், படம் பார்க்கும்போதே படத்தின் கதையைப் பற்றி விவாதிப்பது, சத்தமாக பேசுவது போன்றவை மற்றவர்களுக்கு தொந்தரவாக மாறலாம்.

49
Spoiler கொடுக்காதீங்க

நீங்கள் ஏற்கனவே படத்தை பார்த்திருந்தாலும், இரண்டாவது முறை பார்க்கும்போது திரைப்படத்தின் Twist, Interval Block, Climax போன்றவற்றை முன்கூட்டியே சொல்வது, நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் பட அனுபவத்தையே கெடுத்துவிடும்.

59
சாப்பிடும்போதும் கொஞ்சம் கவனம்

தியேட்டரில் Popcorn, Chips, Cool Drinks இல்லாமல் Movie Experience முழுமையாகாது. ஆனால் Popcorn, Chips Packet போன்றவற்றை சத்தமாக திறப்பது, Crunchy உணவுகளை அதிக சத்தத்துடன் சாப்பிடுவது அருகில் இருப்பவர்களுக்கு தொந்தரவாக இருக்கலாம். அதனால் முடிந்தவரை சத்தம் குறைவாக சாப்பிடுவது நல்லது.

69
முன்னால் இருப்பவரின் Seat-ஐ காலால் தட்டாதீங்க

படத்தை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கும்போது முன்னால் இருப்பவரின் Seat-ஐ காலால் தட்டுவது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். தியேட்டர் ஒரு பொதுவான இடம். முன்னால் இருக்கும் Seat மீது கால்களை வைப்பது அல்லது கால்களை Seat-களுக்கு நடுவே நீட்டுவது மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். எனவே, கால்களை உங்கள் இடத்திற்குள் வைத்துக்கொள்வதே சிறந்தது.

79
Late-ஆ வருவதை தவிர்க்கவும்

படம் ஆரம்பித்த ஓடிக்கொண்டிருக்கும்போது இருட்டில் வந்து உங்கள் Seatஐ தேடுவது உங்களுக்கும் சிரமம், ஏற்கனவே படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையூறாக இருக்கும். எனவே, Show Time-க்கு முன்பாகவே தியேட்டருக்கு வந்து Seat-ஐ கண்டுபிடித்து அமர்வது சிறந்தது.

89
படம் எடுக்காதீங்க

திரையில் வரும் காட்சிகளை Photo அல்லது Video எடுப்பது மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்கும். முக்கியமாக இந்தியாவில் திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்வதற்கு Cinematograph (Amendment) Act, 2023 மூலம் Unauthorized Recording மற்றும் Transmission-க்கு எதிராக கடுமையான சட்ட விதிகள் உள்ளன.

99
குப்பையை விட்டுச் செல்லாதீங்க

Popcorn Box, Cups, Tissue, Food Packets என அனைத்தையும் Seat அருகிலேயே போட்டுவிட்டு வருவது தவிர்க்கப்பட வேண்டும். தியேட்டர் ஊழியர்கள் சுத்தம் செய்வார்கள் என்றாலும், நம்முடைய குப்பையை சரியான இடத்தில் போடுவது அடிப்படை பொறுப்பு.

மொத்தத்தில், தியேட்டரில் படம் பார்க்கும் மற்றவர்களின் அனுபவத்தையும் மதிப்பது முக்கியம். நம்ம Entertainment மற்றவர்களுக்கு Disturbance ஆகிவிடாதபடி இந்த விஷயங்களையும் நினைவில் வைத்துக்கொண்டால், அனைவருக்கும் நல்ல சினிமா Experience கிடைக்கும்.

குறிப்பு: இந்த செய்தி தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் பிரிட்டிஷ் etiquette publisher ஆன Debrett’s வெளியிட்ட “Etiquette at the Cinema” வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories