Arundhathi Remake Sreeleela takes over Anushka Role: அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அருந்ததி' திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தெலுங்கில், கடந்த 2009-ஆம் ஆண்டு அனுஷ்காவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 'அருந்ததி'. இந்த படத்தை இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்க, ஷியாம் பிரசாத் ரெட்டி தன்னுடைய Mallemala Entertainments மூலம் அதிக பட்ஜெட்டில் தயாரித்திருந்தார். அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், சோனு சூட், மனோரமா, சாயாஜி ஷிண்டே, சத்யநாராயணா, பிரம்மானந்தம், ஜான்சி, தீபக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
25
மறுபிறவி கதை:
'அருந்ததி' திரைப்படம் தன்னுடைய ஊரையும், ஊர் மக்களையும் காப்பாற்ற... உயிரை கொடுத்து, தன்னையே ஒரு ஆயுதமாக மாற்றிக்கொள்ளும் ராணியின் மறுபிறவிக் கதையை மையமாகக் கொண்டது. மிகவும் ஆழமான திரைக்கதையை அனைவரும் ரசிக்கும் விதத்தில், மாய மந்திரம், திகில், குடும்பம், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி இருந்தது.
35
கதையின் நாயகியாக மாற்றிய திரைப்படம்:
அனுஷ்கா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, ஒரு ரொமான்டிக் நாயகியாக வலம் வந்த நிலையில், இவரை கதையின் நாயகியாக மாற்றியதும் இந்த திரைப்படம் தான். அதே போல் அந்நாளில், இப்படத்தில் இடம்பெற்ற VFX காட்சிகள் அதிகம் பேசப்பட்டன. மேலும் சிறந்த கதாநாயகிக்கான நந்தி விருது, ஃபிலிம் பேர் விருது ஆகியவை அனுஷ்காவுக்கு கிடைத்தது. படம் வணிகரீதியாகவும் விமர்சன பெரிய வெற்றி பெற்றது.
45
அருந்ததி இந்தி ரீமேக்:
தற்போது 'அருந்ததி' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது. இந்த படத்தை, அல்லு அரவித் தயாரிக்க உள்ளதாகவும், ரீமேக் படங்களுக்கு புகழ்பெற்ற இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்கா நடித்த கதாபாத்திரத்தில், 24 வயது இளம் நடிகையான ஸ்ரீ லீலா நடிக்க உள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி இருந்தாலும், அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய லாபம் கொடுத்த இந்த படத்தை பாலிவுட்டில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
55
முத்திரை பதிப்பாரா ஸ்ரீலீலா:
ஏற்கவே அருந்ததி திரைப்படம், பெங்காலி மொழியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. தெலுங்கு , மற்றும் பெங்காலி மொழியை தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யப்படும் இந்த படம் இந்தியிலும் நல்ல வரவேற்பை பெறுமா? அனுஷ்கா போல் ஸ்ரீலீலாவும் இந்த படம் மூலம் கதையின் நாயகியாக தனி முத்திரை பதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.