பின்னணிப் பாடகர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அரிஜித் சிங். இனி புதிய திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகப் பாடமாட்டார் என்றாலும், இசையுலகில் தனது பயணம் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.
பின்னணி பாடகர் பணியில் இருந்து விலகுவதாக அர்ஜித் சிங் அறிவிப்பு
இந்தி மற்றும் வங்காள மொழியில் பல திரைப்பட பாடல்களுக்கு இசை அமைத்த பிரபல பின்னணி பாடகர் அர்ஜித் சிங் இனி பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்து அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முடிவை அவர் தெரிவித்த நிலையில் அவரது முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. காரணம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது குரல் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்துள்ளது.
23
இசையமைப்பாளராக பயணம் தொடரும்..
பின்னணிப் பாடகர் பணியிலிருந்து விலகினாலும், இசையை விட்டு விலகவில்லை என அரிஜித் சிங் தெளிவுபடுத்தியுள்ளார். இசையில் பல புதுமைகளைக் கண்டுபிடிப்பது, இசையமைப்பது உள்ளிட்டப் பணகளைத் தொடர உள்ளேன். நிலுவையில் உள்ள சில திரைப்படப் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
33
வெற்றிப் பயணம்
2005-ல் 'ஃபேம் குருகல்' ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமான அரிஜித் சிங், 2011-ல் பாலிவுட்டில் அறிமுகமானார். தும் ஹி ஹோ, கேசரியா போன்ற பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள நிலையில் இனி பாடல்களைப் பாடப்போவதில்லை என்ற அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.