முஸ்லிம்கு வீடு தரமாட்டேன்னாங்க; சொந்த வீடு வாங்கி கெத்துகாட்டிய அறந்தாங்கி நிஷா!

Published : Feb 11, 2025, 09:36 AM IST

விஜய் டிவியில் காமெடி ஷோவில் பங்கேற்று பிரபலமான அறந்தாங்கி நிஷா, தற்போது சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.

PREV
15
முஸ்லிம்கு வீடு தரமாட்டேன்னாங்க; சொந்த வீடு வாங்கி கெத்துகாட்டிய அறந்தாங்கி நிஷா!
விஜய் டிவி அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. பட்டிமன்ற பேச்சாளரான இவர் தன்னுடைய டைமிங் காமெடியால் மக்களை மகிழ்வித்து, அடுத்த கோவை சரளா ரேஞ்சுக்கு ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தனுஷின் மாரி 2 படம் மூலம் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான இவருக்கு தற்போது சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

25
புது வீடு வாங்கிய அறந்தாங்கி நிஷா

சினிமாவில் ஒருபுறம் பிசியாக நடித்து வந்தாலும் தனக்கு வாழ்க்கை கொடுத்த விஜய் டிவியிலும் அவர் தொடர்ந்து பயணித்து வருகிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பங்கேற்ற அறந்தாங்கி நிஷா, தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். அறந்தாங்கியில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் நிஷாவுக்கு சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்பது பல நாள் கனவு. அந்த கனவு தற்போது நனவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... தொழிலதிபரை மணந்த GOAT பட நடிகை! கேரள - ஆந்திர முறையில் நடந்த திருமணம்!

35
வாடகைக்கு வீடு தரல

சொந்த வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் நடத்தி உள்ள அறந்தாங்கி நிஷா, ஒரு நீண்ட பதிவையும் போட்டுள்ளார். அதில், “உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னை வீடு காய்ச்சியாச்சு. வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வச்சிருக்கேன், நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரும் கிடையாது. சின்ன வயசுல ஒரு தடவை தான் அப்பா என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க. அதுக்கப்புறம் நான் எப்ப சென்னைனு சொன்னாலும் இந்த கூட்டிட்டு போறேன் மா கூட்டிட்டு போறேன்னு என்னை எப்பவும் ஏமாத்திட்டே இருப்பாங்க.

45
சொந்த வீடு கனவு நனவானது

திரும்ப நான் சென்னையில பயணிக்கிறதுக்கு காரணம் என்னுடைய அப்பா. அதுக்கு அப்புறம் என்னுடைய தமிழ். ஆறு மாசமா சென்னையில வீடு தேடுனப்போ ஆர்டிஸ்ட்டுக்கு வீடு தர மாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததுக்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கிறலாம்னு முடிவு எடுத்து இப்போ வீடு வாங்கியாச்சு. எப்பவுமே எல்லார் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட; நம்ம எங்க தோக்குறமோ அங்கதாங்க ஜெயிக்கணும். 

55
அறந்தாங்கி நிஷா வீடு கிரஹப்பிரவேசம்

என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும், என்னுடைய நண்பர்களும், என்னுடைய ரசிகர்களும், என்னுடைய தமிழும் தான் காரணம். எல்லாருக்குமே ரொம்ப நன்றி என்னுடைய வளர்ச்சியை உங்களுடைய வளர்ச்சியா பாக்குறதுக்கும்,என்னை எப்பவுமே உங்களில் ஒருத்தியா பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நான் வாங்குனது பங்களா இல்ல; சிங்கிள் பெட்ரூம் வீடு தான். எல்லாத்தையும் விட பெரிய நன்றி இறைவனுக்கும், எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மட்டும்தான்,நன்றி மக்களே” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பிரேக்டவுன் ஆன விடாமுயற்சி; 5ம் நாளில் சரசரவென குறைந்த வசூல்!

Read more Photos on
click me!

Recommended Stories