பீஸ்ட் பட சாதனையை அடித்து தூக்கிய கமல்..யூட்யூபில் 'பத்தல பத்தல' செய்த சாதனை!

Kanmani P   | Asianet News
Published : May 15, 2022, 03:59 PM IST

அரபிக் குத்து பாடல் மூன்று நாட்களில் செய்த சாதனையை தற்போது கமலின் விக்ரம் பட முதல் சிங்கிள் பத்தல பத்தல முறியடுத்துள்ளது.

PREV
15
பீஸ்ட் பட சாதனையை அடித்து தூக்கிய கமல்..யூட்யூபில் 'பத்தல பத்தல' செய்த சாதனை!
beast

நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர்களுடன் செல்வராகவன் , ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, VTV கணேஷ் , ஷாஜி சென் , அபர்ணா தாஸ் , சதீஷ் கிருஷ்ணன், லில்லிபுட் மற்றும் அங்கூர் அஜித் விகல் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

25
arabic kuthu

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அனிரூத் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டிருந்தார். தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றிருந்தது. இந்த படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து மாஸ் ஹிட் கொடுத்தது.

35
arabic kuthu

படம் வெளியாகும் முன்னரே அரபிக் குத்து பாடல் முதல் சிங்குளாக வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான இந்த பாடல் ரீல்ஸ் வடிவில் பட்டி தொட்டியெல்லாம் பரவியது.  நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அரபிக் குத்து ஸ்டெப் போட்டனர். இந்த பாடல் வெளியாகி மூன்று நாட்களில் யூடியூப்பில் மட்டும் 16 மில்லியன் பார்வைகளை பெற்றது.

45
vikram movie

 தற்போது வெளியான வெளியாகியிருக்கும் பத்தல பத்தல பாடல் முறியடித்துள்ளது. கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்திலிருந்து சமீபத்தில் வெளியாகிய முதல் சிங்கிளுக்கு எதிராக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த பாடல் வெளியாகிய மூன்று நாட்களில்  17 மில்லியன் பார்வைகளை குவித்து அசைக்க முடியாத அரபிக் குத்து பாடல் சாதனையை முறியடித்துள்ளது.   

55
vikram movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.  இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது. அந்த வகையில் விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரைலர் லஞ்ச்   சென்னையில் பிரமாண்டமாக இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories