ரஜினியின் அந்த முடிவால் தான் தர்பார் பிளாப் ஆனதா? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்

Published : Apr 04, 2023, 02:10 PM IST

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் பிளாப் ஆனதற்கான காரணத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

PREV
14
ரஜினியின் அந்த முடிவால் தான் தர்பார் பிளாப் ஆனதா? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. ஆனால் கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார், ஸ்பைடர் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படம் கூட இயக்கவில்லை.

24

இந்நிலையில், அவர் தயாரிப்பில் 1947 என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது இயக்கத்தில் வெளிவந்த தர்பார் திரைப்படம் பிளாப் ஆனதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதையும் படியுங்கள்... தமிழ் புத்தாண்டு ரிலீசுக்காக வரிசைகட்டும் சிறுபட்ஜெட் படங்கள்! ஏப்ரல் 14-ல் ரிலீசாகும் தமிழ் படங்கள் என்னென்ன?

34

அதில் அவர் கூறியதாவது : “தர்பார் படம் பண்ணும் போது, ஒருகட்டத்தில் நமக்கு தான் பிலிம் மேக்கிங் நல்லா வருகிறதே என்கிற தவறான புரிதல் எனக்குள் வந்துவிட்டது. மார்ச் மாதம் ஷூட்டிங்கை தொடங்கி வேகமாக முடிக்க சொன்னார். ஏனென்றால் அந்த சமயத்தில் ஆகஸ்ட் மாதம் அவர் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தது. நான் பயங்கரமான ரஜினி ரசிகன் வேற. அதனால் அந்த படத்தை எந்த காரணம் கொண்டும் நான் மிஸ் பண்ண விரும்பவில்லை.

44

தர்பார் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும் அந்த சமயத்தில் பேசப்பட்டது. அவர் அதன்பின் அரசியலில் நுழைய இருந்ததால் மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதத்திற்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது. அதனால் எப்படியாவது ரஜினியை வைத்து ஹிட் கொடுத்துவிட வேண்டும் அதே சமயம் இந்த புராஜெக்டை மிஸ் பண்ணிவிடக் கூடாதுனு ஒரு கணக்கு போட்டேன் அங்கதான் அது தப்பாபோச்சு. சரியான திட்டமிடல் இல்லாததனால் தான் அப்படம் பிளாப் ஆனது” என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... பாவடை தாவணி அணிந்து... காதலனுடன் திருப்பதிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஜான்வி கபூர்... வைரலாகும் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories