தமிழ் திரையுலகில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஏ.ஆர்முருகதாஸ். அவருக்கு திவ்யா என்கிற மகள் இருக்கிறார். அவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை கள்ளக்குறிச்சியில் நடத்தி உள்ளார். அந்த விழாவில் அவரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர். இந்த விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.
24
கனிமா பாடலுக்கு நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கனிமா பாடலுக்கு தான் நடனமாடி அசத்தி இருக்கிறார். அப்பாடலில் இடம்பெற்ற டிரெண்டிங்கான ஹூக் ஸ்டெப்பை அசத்தலாக ஆடி அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மேடையில் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து அவரது மகன் மற்றும் மகள் இருவருமே ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுவாரா என பலரும் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
34
கம்பேக் கொடுப்பாரா ஏ.ஆர்.முருகதாஸ்?
தமிழ் சினிமாவில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக இயக்கிய படம் சிக்கந்தர். பாலிவுட் படமான இதில் சல்மான் கான் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் சல்மான் கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் அன சிக்கந்தர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கைவசம் தற்போது மதராஸி திரைப்படம் உள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.