தல தளபதி படங்கள் முதல் ஹாப்பிராஜ் வரை... ஏப்ரல் 24ல் தியேட்டர் & OTT-யில் ரிலீஸ் ஆகும் ஒரு டஜன் மூவீஸ்

Published : Apr 21, 2026, 03:50 PM IST

ஏப்ரல் 24-ந் தேதி தியேட்டரில் விஜய் படமும், அஜித் படமும் போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர ஓடிடியிலும் டஜன் கணக்கிலான புதுப்படங்கள், வெப் சீரிஸ் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Theatre Release Movies on April 24

தியேட்டர் ரிலீஸ் படங்கள்

தமிழ்நாட்டில் தேர்தல் படுஜோராக நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது. எலெக்‌ஷனும் இரு தினங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் ஃபீவர் முடிந்த கையோடு, இந்த வீக் எண்ட் தியேட்டரில் ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த அமர்க்களம் ஆகிய படங்கள் வருகிற ஏப்ரல் 24-ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. இதுதவிர பிக் பாஸ் ராணா ஹீரோவாக நடித்த பிரேக் ஃபாஸ்ட், வீர அன்பரசுவின் கமாண்டோவின் லவ் ஸ்டோரி, பிரதீப் செல்வராஜ் நடித்த பாவக்கூத்து, சாக்‌ஷி அகர்வால் நடித்த தீயோர் கூடம், நாராயணன் இயக்கிய பேட்டில், போன்ற சிறு பட்ஜெட் படங்களும் வருகிற ஏப்ரல் 24ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளன.

24
ஓடிடி ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் ஓடிடி-யில் கொண்டாட்டம்தான். நெட்ஃப்ளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ என பல தளங்களில் அசத்தலான படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

தமிழில் இந்த வாரம் ஜிவி பிரகாஷ் குமார் நடித்த ஹாப்பிராஜ் திரைப்படம் ஓடிடிக்கு வர உள்ளது. இப்படத்தில் கெளரி பிரியா, அதிர்ச்சி அருண் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். நல்ல மெசேஜ் கொண்ட இப்படம் ஏப்ரல் 24ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

மலையாள பொலிட்டிக்கல் த்ரில்லர் படமான 'ப்ரதிச்சாயா' இந்த ஆண்டு மார்ச் மாதம் தியேட்டர்களில் வெளியானது. இப்போது ஓடிடி-க்கு வருகிறது. ஏப்ரல் 24 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

அனில் கபூரின் ஆக்‌ஷன் த்ரில்லர் சீரிஸான '24', ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஏப்ரல் 24 முதல் இந்த சீரிஸை பார்க்கலாம். இதில் அனில் கபூர், ஜெய் சிங் ரத்தோர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

34
ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்கள்

'புரூக்ளின் நைன்-நைன்' சீரிஸ், இந்தியாவில் பீகாக் ஹப் வழியாக ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்த காமெடி சீரிஸின் 8 சீசன்களிலும் ஆண்டி சாம்பெர்க் மற்றும் ஆந்த்ரே ப்ராஹர் நடித்துள்ளனர். ஏப்ரல் 20 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் இதைப் பார்க்கலாம்.

பீட்டர் கபால்டி மற்றும் குஷ் ஜம்போ நடித்த க்ரைம் டிராமா சீரிஸான 'கிரிமினல் ரெக்கார்ட்' சீசன் 2 வருகிறது. இந்த சீசனில் கதை இன்னும் விறுவிறுப்பாக இருக்கும். ஏப்ரல் 22 முதல் ஆப்பிள் டிவி-யில் இதைப் பார்க்கலாம். மேலும், 'கில்லிங் கிரவுண்ட்: கில்கோ பீச் மர்டர்ஸ்' சீரிஸ் ஏப்ரல் 22 முதல் பிரைம் வீடியோவிலும், 'திஸ் இஸ் எ கார்டிங் ஷோ' ஏப்ரல் 22 முதல் நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியாகிறது.

'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்-டேல்ஸ் ஃப்ரம் 85' சீரிஸ் இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகிறது. இது ஒரு அனிமேஷன் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சீரிஸ். ஏப்ரல் 23 முதல் நெட்ஃப்ளிக்ஸில் இதைப் பார்க்கலாம்.

44
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

'ஏபெக்ஸ்' ஒரு சர்வைவல் ஆக்‌ஷன் த்ரில்லர் படம். இதுவும் இந்த வாரம் வெளியாகிறது. பால்டாசர் கோர்மாகுர் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏப்ரல் 24 முதல் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். இதில் சார்லீஸ் தெரான், டேரோன் எகெர்டன் மற்றும் எரிக் பானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜப்பானிய டிராமா சீரிஸான 'ஸ்ட்ரெய்ட் டு ஹெல்'-ல், எரிகா டோடா ஜோதிடர் கசுகோ ஹோசோகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 27 முதல் நெட்ஃப்ளிக்ஸில் இந்த சீரிஸை பார்க்கலாம்.

Sold Out on You (ஏப்ரல் 22): மேத்யூ லீ என்ற விவசாயியின் காதல், கஷ்டங்கள், குழப்பங்கள் நிறைந்த ஜாலியான ரொமான்டிக் காமெடி.

If Wishes Could Kill (ஏப்ரல் 24): 'Girigo' என்ற ஆபத்தான மொபைல் ஆப்பின் மர்மத்தை கண்டுபிடிக்க 5 பள்ளி மாணவர்கள் முயற்சிக்கும் தென்கொரிய ஹாரர் சீரிஸ்.

பேண்ட் மேளம் படத்தின் கதைப்படி சிறுவயது நண்பர்களான கிரி, ராஜி காதலிக்கிறார்கள். ஆனால், காலப்போக்கில் ஏற்படும் சில தவறான புரிதல்களால் அவர்களின் காதலும், குடும்பமும் பிரிகிறது. இந்த கிராமத்து காதல் கதை ஏப்ரல் 24 முதல் Zee5 தளத்தில் வெளியாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories