செத்தா... லோகேஷ் கனகராஜ் படத்துல தான் சாகணும் - பிரபல பாலிவுட் இயக்குனரின் வினோத ஆசை

First Published | Jun 15, 2023, 10:08 AM IST

பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அனுராக் கஷ்யப், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படத்தில் சாக வேண்டும் என பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் நடிக்க டோலிவுட், பாலிவுட் என பல்வேறு முன்னணி நடிகர்களும் காத்திருக்கின்றனர். ஆனால் அவரோ கோலிவுட்டில் தான் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல் என்னவென்றால் அவரது திரைக்கதை தான். அதிலும் கடைசியாக இவர் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் தனக்கென தனி யூனிவர்சை கிரியேட் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் லோகேஷ். அவர்மீது நடிகர்கள் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைப்பதற்கு காரணம், அவர் படத்தில் 5 நிமிட காட்சியில் நடித்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிடலாம் என்பதால் தான். இதற்கு எடுத்துக்காட்டு தான் சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம்.

இதையும் படியுங்கள்... 55 வயது தமிழ் நடிகையுடன் காதலா? முதல் முறையாக மௌனம் கலைத்த தெலுங்கு பிரபாஸ் ஸ்ரீனு!

Tap to resize

இப்படி படத்துக்கு படம் லோகேஷுக்கு மவுசு எகிறிக்கொண்டே செல்கிறது. தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். அதில் ஒன்று கைதி 2, மற்றொன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 திரைப்படம். இந்த இரண்டு படங்களை முடித்த பின்னர் தான் மற்ற படங்களுக்கு கால்ஷீட் என சொல்லும் அளவுக்கு படு பிசியாக இயங்கி வருகிறார் லோகேஷ்.

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அனுராக் கஷ்யப், லோகேஷ் கனகராஜின் படத்தில் ஒரு கதாபாத்திரமாக சாக வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “எனக்கு எல்சியூவில் எந்த ரோலும் வேண்டாம். ஆனால் செத்தா, லோகேஷ் படத்தில் தான் சாக வேண்டும். ஏனெனில் அவர் தான் நடிகர்கள் புகழைப் பெறும் வகையில் சாகும் காட்சிகளை படத்தில் வைக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... வடிவேலு காமெடியால் தான் அந்தப் படம் ஹிட் ஆகல... என்ன சுந்தர்.சி பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு

Latest Videos

click me!