சுந்தர் சி நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் தலைநகரம். சுராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார் சுந்தர் சி. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், தற்போது 17 ஆண்டுகளுக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. சுந்தர் சி நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அஜித் நடித்த முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா போன்ற படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்கி உள்ளார்.
இதற்கு பதிலளித்து சுந்தர் சி பேசியதாவது : “நான் நகரம் மறுபக்கம் என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அப்படத்தில் இடம்பெறும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்படுகின்றன. அந்த படத்தோட மொத்த ரன்னிங் டைமே 2 மணிநேரம் தான். அதில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மட்டும் 45 நிமிடங்கள் வரும். காமெடி காட்சிகள் அனைத்தும் நன்றாக இருந்ததால் அந்த காட்சிகளில் கைவைக்காமல், மற்ற காட்சிகளை சுருக்க வேண்டிய நிலை வந்தது. தலைநகரம் 2-ம் பாகத்தில் காமெடி காட்சிகள் இருந்தா நல்லா இருக்காதுனு தோணுச்சு, அதனால தான் வைக்கல” என கூறினார்.
சுந்தர் சி நகரம் மறுபக்கம் படத்தை எடுத்துக்காட்டாக சொன்னாலும், தலைநகரம் என்கிற படம் ஹிட் ஆனதற்கு முக்கிய காரணமே வடிவேலுவின் காமெடி தான் என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அப்படத்தில் அவர் நடித்த நாய்சேகர் என்கிற கதாபாத்திரமும், அவர் பேசிய காமெடி டயலாக்குகளும் இன்று மீம் டெம்ப்ளேட்டுகளாகி இருக்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் மனதில் ஆளமாக பதிந்துள்ளது அந்த காமெடி காட்சிகள். அப்படி இருக்கையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.
இதையும் படியுங்கள்... சமந்தாவை தொடர்ந்து 'சீதா ராமம்' பட நடிகை மிருணாள் தாகூருடன் ரொமான்ஸ் பண்ண போகும் விஜய் தேவரகொண்டா!