'அந்நியன்' ஹிந்தி ரீமேக்..! விக்ரமாக நடிக்க போவது இவரா? இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

First Published Apr 14, 2021, 1:51 PM IST

இயக்குனர் ஷங்கர், பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தவகல்கள் வெளியாகி வந்த நிலையில், அதனை உறுதி செய்துள்ளார். 'அந்நியன்' ஹிந்தி ரீமேக் குறித்த அதிகார பூர்வ தகவல்களை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
 

இயக்குனர் ஷங்கர் நடிகர் கமலஹாசனை வைத்து இயக்கி வந்த 'இந்தியன் 2' திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 'இந்தியன் 2 ' துவங்கியதில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
undefined
குறிப்பாக படப்பிடிப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தில், 3 பேர் பலியாகினர். பின்னர் கொரோனா பிரச்சனை தலைதூக்கவே, முழுமையாக படப்பிடிப்பு கைவிடப்பட்டது.
undefined
அதே நேரத்தில் கமல்ஹாசன், சட்ட மன்ற தேர்தலில் பிசியாக இருந்ததால், மற்ற படங்களை இயக்குவதில் ஷங்கர் கவனம் செலுத்த துவங்கினார்.
undefined
அந்த வகையில் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவை வைத்து தில் ராஜு தயாரிப்பில் ராம் சரணின் 50-வது படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
undefined
இதை தொடர்ந்து ஏற்கனவே பாலிவுட் படங்களை இயக்க திட்டமிட்டிருந்த இயக்குனர் ஷங்கர், தற்போது நேரடியாக பாலிவுட் படம் ஒன்றையும் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக நடிகர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தையும் நடந்ததாக கூறப்பட்டு வந்தது.
undefined
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழில் விக்ரம் நடித்த வேடத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாகவும் இந்த படம் ஹிந்தியில் உருவாக்குவது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
undefined
மேலும் இந்த நேரத்தில், என்னை விட யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்றும், இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய சினிமா அனுபவத்தை மீண்டும் கொண்டு வருவார்கள் என்றும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
undefined
மேலும் இந்த நேரத்தில், என்னை விட யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்றும், இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய சினிமா அனுபவத்தை மீண்டும் கொண்டு வருவார்கள் என்றும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
undefined
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம், சுமார் 15 வருடங்களுக்கு பின் ஹிந்தியில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!