Anna Serial: பரணி - சண்முகத்தை ஒன்னு சேர்க்க போகும் நல்ல செய்தி? அண்ணா சீரியல் அப்டேட்!

Published : Mar 10, 2025, 05:13 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'அண்ணா'. இந்த சீரியலின், சண்டே ஸ்பெஷல் எபிசோடில்... ரத்னா வாழ்க்கை பற்றி பேசியதால் சௌந்தரபாண்டியை ஷண்முகம் அடிக்க அதை பரணி பார்த்த நிலையில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.  

PREV
14
Anna Serial: பரணி - சண்முகத்தை ஒன்னு சேர்க்க போகும் நல்ல செய்தி? அண்ணா சீரியல் அப்டேட்!
Anna serial

எப்படியும் பரணியை சமாதானம் செய்ய வேண்டும் என ஷண்முகம் நினைக்கும் நிலையில், பரணி என்னுடைய அப்பாவையே நீ அடிக்கிறியா?  இனிமே என்ன நடந்தாலும் உன்னோட வீட்டு நான் வரவே மாட்டேன் என கூறிவிட்டு செல்ல, இதை பார்த்த சௌந்தரபாண்டி.. மனதுக்குள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்.

24
Shanmugam Pray Lord Muruga

தன்னை மீறி இப்படி பட்ட விஷயங்கள் நடந்ததால் மனவேதனையோடு முருகன் கோவிலுக்கு வரும் ஷண்முகம், பரணி வீட்டுக்கு வராமல் நான் எங்கேயும் போக மாட்டேன் முருகா என கூறி... குலத்தில் இருந்து முருகருக்கு தண்ணீர் மொண்டு அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறான். 

34
Bharani and siva balan talk

மறுபக்கம் பரணி கிளினிக்கில் சிவபாலனிடம், என்ன நடந்தாலும் அது எப்படி அப்பாவை கைநீட்டி அடிக்கலாம் என கோவமாக பேசுகிறார். சிவபாலன் இதுல ஏதோ சந்தேகம் இருக்கு அதை ஷண்முகத்துக்கிட்ட கேட்டால் தான் தெரியும் என கூற பரணி சமாதானம் ஆகவில்லை. 

44
isakki pregnant:

சண்முகம் முருகனுக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி ஊற்றி டயார்டாக இருக்க உடன்குடி உள்ளிடோர் போதும் என தடுத்து நிறுத்த முயற்சி செய்ய சண்முகம் கேட்க மறுக்கிறான்.  இன்னொரு பக்கம் இசக்கி வாந்தி எடுக்க முருகன் காலண்டர் ஆடுகிறது. ஒரு பக்கம் பரணியின் கோபம், இன்னொரு பக்கம் சண்முகத்தின் பிடிவாதம் என இருக்க இசக்கி வாந்தி எடுத்து மயங்கி விழுவதால் இவர் கர்ப்பமாக ஆவாள் என தெரிகிறது. இந்த நல்ல செய்தியே பரணி மற்றும் சண்முகத்தை சேர்த்து வைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று என்ன நடக்க போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம். 

Read more Photos on
click me!

Recommended Stories