‘புஷ்பா 2: தி ரூல்’ வசூல் குறித்து வழக்கறிஞர் நரசிம்மராவ் இந்த பொதுநல வழக்கை (PIL) தாக்கல் செய்துள்ளார். சிறப்பு காட்சிகள், டிக்கெட் விலை உயர்வு காரணமாக ‘புஷ்பா 2’ படத்திற்கு அதிக வருவாய் கிடைத்ததாக அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
உள்துறை அமைச்சகம் சிறப்பு உத்தரவு பிறப்பித்து சிறப்பு காட்சிகள், டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி அளித்ததாக கூறினார். சிறப்பு காட்சி, டிக்கெட் விலை உயர்வுக்கு அனுமதி அளித்ததற்கான காரணத்தை கூறவில்லை என நீதிமன்றத்தில் விளக்கினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, திரைப்படங்களின் லாபத்தை கலைஞர்களின் நலனுக்காக ஒதுக்க வேண்டும் என கோரினார்.
‘ஏற்கனவே சிறப்பு காட்சிகள், டிக்கெட் வசூல் முடிந்துவிட்டது அல்லவா’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, அதன் மூலம் கிடைத்த லாபம் குறித்து மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் விளக்கினார். அதற்கு தகுந்தாற்போல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.