ரத்னாவை அசிங்கப்படுத்த நடக்கும் சதி - ஷண்முகம் இதை தாங்குவாரா? அண்ணா சீரியல் அப்டேட்!

Published : Feb 21, 2025, 12:13 PM IST

சூடாமணிக்கு நடந்ததை போல் ஒரு அவமானத்தை ரத்னாவுக்கு தேடி தரும் நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.  

PREV
16
ரத்னாவை அசிங்கப்படுத்த நடக்கும் சதி - ஷண்முகம் இதை தாங்குவாரா? அண்ணா சீரியல் அப்டேட்!
அண்ணா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில்,  ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் நெற்றியை தினம் ரத்னா ஷண்முகத்துடன், ஸ்கூலுக்கு சென்ற நிலையில், இன்று அவளுக்கு எதிராக நடக்க உள்ள சதி திட்டம் குறித்து பார்ப்போம்.

26
பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கும் வெங்கடேஷ்

எப்படியும் ரத்னா மனதை மாற்றி அவளை பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கும் வெங்கடேஷ் அவசர அவசரமாக ஸ்கூலுக்கு வர, வழியில் அவனை சந்திக்கும் அறிவழகன் நீங்க, சின்ன புள்ளைங்களுக்கு தானே கிளாஸ் எடுக்குறீங்க அப்பறம் எதுக்கு இவ்வளவு சீக்கிரமா ஸ்கூலுக்கு போறீங்க என வெறுப்பேத்த, வெங்கடேஷ் கடுப்பாகிறான்.

Anna Serial: சௌந்தர பாண்டி திட்டத்தை உடைத்த ஷண்முகம் - ஷாக் கொடுத்த பரணி? அண்ணா சீரியல் அப்டேட்!

36
ஷண்முகத்துடன் வந்த ரத்னா

அடுத்ததாக ஷண்முகத்துடன் வந்த ரத்னா, வழியிலேயே வண்டியை நிறுத்தி... ஆமாம் நீ ஏன் இப்போ? பரணியை அமெரிக்காவுக்கு படிக்க அனுப்ப மாட்டுற? என்று பேச்சை தொடங்க... ஷண்முகம் தங்கையை கொஞ்சம் அதட்டலாக 'ஓ  எனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்துடீங்களா? உங்களை படிக்க வச்ச எனக்கு, அவங்களுக்கும் என்ன செய்யணும்னு தெரியும்? என சொல்ல, ஷண்முகத்திடம் இருக்கும் இந்த மாற்றத்தை பார்த்து ரத்னா அதிர்ச்சியடைகிறாள்.

46
கோவத்தில் ரத்னா

இந்த சமயத்தில் உடன்குடியிடம் இருந்து போன் கால் வர, ஷண்முகம் ரத்னாவிடம் சரி நீ ஆட்டோல ஸ்கூல் போயிடு, நான் ஆட்டோ ஸ்டாண்ட்யில் இறக்கி விடுறேன் ஏன் சொல்ல, அதற்க்கு ரத்னா ஒன்னும் வேண்டாம். ஆட்டோ ஸ்டாண்டுக்கு நானே போய்க்கிறேன் என கோவத்தோடு சொல்கிறாள் .

Anna Serial: பரணியின் பிடிவாதத்தால் வரப்போகும் பிரச்சனை; சண்முகம் செய்யப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

56
ரத்னாவை அழைத்து செல்லும் அறிவழகன்:

இந்த நேரம் பார்த்து, அறிவழகன் அந்த வழியாக வர... ஷண்முகம் டேய் வெள்ளக்கோட்டான் ரத்னாவை கொஞ்சம் ஸ்கூலில் டிராப் பண்ணிடு என்று சொல்ல, ரத்னா அவன் கூட என்னால போக முடியாதுனு சொல்கிறாள். உடனே அறிவழகன், ஏங்க நான் உங்களை என்ன பண்ணேன்... என்று கூறி அவளை வண்டியில் அழைத்து செல்கிறான். 

66
ரத்னாவை அசிங்கப்படுத்த சதி திட்டம்:

இந்த காட்சியை பார்த்த வெங்கடேஷ், கோவத்தில் கொந்தளிக்கிறான். உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று அரிவாள் சாணம் பிடிக்கும் இடத்தில் போய் நிற்க, சௌந்தரபாண்டி இதை பார்த்து அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி ஊர் தப்பா பேசணும்.. அப்போ நீ அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறதா சொன்னா காலம் முழுக்க அவ உன் காலடியில் கிடப்பா. என கொளுத்தி போட வெங்கடேஷும் நயவஞ்சக புன்னகையோடு சிரிக்கிறார். இப்படி நடந்தால் அதை ஷண்முகம் தாங்குவானா? அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்பது பற்றி அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

Anna Serial: முத்துபாண்டியை ஏற்றி விட்ட சௌந்தரபாண்டி; எச்சரிக்கும் ஆன்மா? அண்ணா சீரியல் அப்டேட்!

Read more Photos on
click me!

Recommended Stories