பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பா பற்றி உருகி பேசிய அனிதா..! கடைசி வரை கிடைக்காமலேயே போயிடுச்சு..!

First Published | Dec 29, 2020, 2:20 PM IST

பிரபல செய்தி வாசிப்பாளராகவும், பிக்பாஸ் போட்டியாளருமான அனிதா சம்பத்தின் கதை, எழுத்தாளர் ஆர்.சி.சம்பத் உடல்நல பிரச்சனை காரணமாக இன்று காலமாகியுள்ளார். 
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய குடும்பத்தை பற்றி பேச வேண்டாம் என, கோபப்பட்டதால் தற்போது ஒரே அடியாக வெளியேறியுள்ளார்.
ஆனால் இவரே, பல சமயங்களில் தன்னுடைய குடும்பத்தினர் பற்றி பேசியுள்ளார்.
Tap to resize

அப்படி பிக்பாஸ் டாஸ்க் ஒன்றில் தன்னை பற்றி பகிர்ந்து கொண்ட அனிதா, ஆரம்பத்தில் இருந்து தங்குவதற்கு ஒரு வாடகை வீடு இல்லாமல் உறவினர்கள் வீட்டில் தங்கி, டியூஷன் எடுத்து தன்னுடைய கல்லூரி செலவுகளுக்கு சம்பாதித்த கதையெல்லாம் கூறி ரசிகர்கள் மனதை உருக வைத்தார்.
இதை தொடர்ந்து, ஒருமுறை தனக்கு தந்தையின் பாசம் இதுவரை கிடைத்ததே இல்லை. ஒருமுறை கூட... அவரை ஆசையாக நான் தொட்டது கூட கிடையாது என கூறி அழுதார்.
மேலும், ஒரு ஆணின் பாசம் எப்படி இருக்கும் என்பதை காட்டியது தன்னுடைய கணவர் பிரபா தான் என கூறியிருந்தார்.
பலர் அனிதா ஏங்கும் அப்பாவின் பாசம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் கிடைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
ஆனால் அனிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களிலேயே அவரது தந்தை காலமாகியுள்ளது பேரதிர்ச்சியாக உள்ளது.
எழுத்தாளரும், கதையாசிரியருமான ஆர்.சி.சம்பத், உடல்நல பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கிய , அந்த தந்தை பாசத்தை கொடுக்காமலேயே சென்றுள்ளார் அவரது தந்தை.
பல புத்தகங்களை எழுதியுள்ள அனிதா சம்பத்தின் தந்தைக்கு நடிகர் கமலஹாசன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!